Saturday 26 October 2024

 

வெடி நம்மீது விழுந்தால் நில், படு,உருள் - தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
 

வெடிக்காமல் இருக்கும் வெடிகளை ஒன்று சேர்த்து தீ வைக்காதீர்கள் 


பாதுகாப்பான  தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு  விழிப்புணர்வு 































































































































































தேவகோட்டை: - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி?  என  தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலைய  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.
                                                    பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஸ்ரீதர்   வரவேற்றார்.  தேவகோட்டை தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணேசன்   பேசும்போது ,   பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்  என்பது குறித்து நேரடி செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார். 

                                             குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். தவறுதலாக நம்மீது வெடி விழுந்துவிட்டால் ஸ்டாப்,ட்ராப் ,ரோல் என்கிற முறையை பின்பற்றுங்கள் .

                                           புஷ்வாணம்,சங்கு சக்கரம்,வெடிகள்  வைக்கும்போது பெரிய ஊதுபத்தியை பயன்படுத்துங்கள். சுமார் இரண்டு அடி தள்ளி நின்று வெடியை வையுங்கள்.

                                வெடி , வெடிக்கும்போது எப்போதுமே அருகில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள்.வெடிகளை பாட்டில், கொட்டாங்குச்சி போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது. வெடிகளை கைகளில் பிடித்து வெடிக்க கூடாது.

                                                 வெடிக்காமல் இருக்கும் வெடிகளை ஒன்று சேர்த்து தீ வைக்க கூடாது.அவ்வாறு செய்தால் நமது முகத்தில் வெடி வந்து விழுந்து பாதிப்பு ஏற்படும்.

     

                                           வெடிக்கும்போது நைலான் ,பாலியஸ்டர் துணிகளை போட்டு கொண்டு வெடிக்க வேண்டாம். பருத்தி துணிகளை அணிந்து மட்டுமே வெடியுங்கள்.அதுவே பாதுகாப்பானது.

                                வெடிகளை சட்டை, பேண்ட் பைகளில் வைத்து  கொள்ள வேண்டாம். நாம் வெடிக்கும்போது கவன குறைவாக இருந்தால் நமது மேல் வெடி தீ விழுந்தால் பைகளில் உள்ள வெடிகளும் வெடித்து உயிருக்கு ஆபத்தாகும்.எனவே பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள் என்று பேசினார்.

                                      நிகழ்வில்  தேவகோட்டை தீயணைப்பு - மீட்பு பணிகள்  நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர்  முனீஸ்குமார்   தீயனைப்போர் வீரப்பெருமாள்,சொக்கலிங்கம், ஜோசப் , பாலாஜி  ஆகியோர்  பாதுகாப்பான தீபாவளி  குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் .  நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி   நன்றி கூறினார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு -மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணேசன்    நேரடி செயல் முறை விளக்கம்

 அளித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.




வீடியோ : 
https://www.youtube.com/watch?v=7VJOTk-Mzuo

https://www.youtube.com/watch?v=y1XVsRxR1J0













No comments:

Post a Comment