Sunday, 17 December 2017

மத்திய  அரசின் சுங்கத்துறை துணை தலைவருடன் மாணவர்கள் கலந்துரையாடல் 

வேலையில் எது பெரிய வேலை? மாணவரின் அசத்தலான பதில் 

வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படி?

உங்கள் பெயரின் பொருளை அறிந்துக்கொள்ளுங்கள்

சுங்கத்துறை துணை தலைவர் பேச்சு 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய  அரசின் சுங்கத்துறை துணை தலைவருடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.
                                                நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.மாணவிகளின் திருக்குறள் நடனம் நடைபெற்றது .மத்திய  அரசின் சுங்கத்துறை துணை தலைவர் ராஜேந்திரன் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.மாணவர்களை நோக்கி, வேலையில்  எது பெரிய வேலை என்று கேட்டார்.அப்போது கோட்டையன் என்கிற மாணவர், நாம் பார்க்கும் வேலை நமக்கு பிடித்து இருந்தால் அதுதான் நமக்கு பெரிய வேலை ஆகும் என்று சொன்னார்.அதனை ஆமோதித்து வாழ்த்து தெரிவித்த துணை தலைவர் தொடர்ந்து பேசும்போது,ஒழுக்கம் அனைத்துக்கும் மேலானது.இதனை வள்ளுவர் அழகாக சொல்லி உள்ளார்.ஏழு என்கிற எண் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.திருக்குறளில் ,வானவில்லில் என முக்கியமான அனைத்திலும் ஏழு என்கிற எண் உள்ளது.நாம் பார்க்கும் வேளையில் பெரியது,சிறியது என்று எதுவும்இல்லை.நாம் செய்யும் வேலையை சரியாக செய்தால் அதுவே பெரிய வேலையாகும்.வாட்ச் என்கிற வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்லி அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் விளக்கம் சொல்லி அதனை மனதில் நிறுத்தி சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று பேசினார்.மாணவர்கள் ஜனஸ்ரீ ,காயத்ரி,சந்தியா,வெங்கட்ராமன் ஆகியோர் கேள்விகளுக்கு பதில் சொல்லி அசத்தினார்கள்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.


பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய  அரசின் சுங்கத்துறை துணை தலைவர் ராஜேந்திரனுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.






மேலும் விரிவாக :
                                          
                      மத்திய  அரசின் சுங்கத்துறை துணை தலைவர் ராஜேந்திரனுடன் மாணவர்கள் கலந்துரையாடல் 

                                            மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி எல்லோரையும் மதித்து நடக்க வேண்டும்.அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது.உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப்போகிறேன்.உங்கள் பெயரின் பொருள் என்ன? உங்கள் பள்ளியின் பெயரின் பொருள் என்ன? எப்போதுமே ஒரு வார்த்தை எடுத்துக்கொண்டால் அதன் பொருளை புரிந்துகொள்ளுங்கள்.நமது கல்வி அனைத்தையும் கற்று தருகிறது.அனைவரிடமும் மரியாதையை கட்டுதல் வேண்டும்.திருக்குறளில் தீயவை செய்தால் அது நம்மை கொன்று விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.ஒழுக்கம்,கல்வி இருந்தால் நமக்கு உயர்வு தானாக வரும்.
                      யார் உங்களின் மேல் பாசமாக இருந்தாலும் நீங்கள்  அனைவரின் மேலும் அன்பை காட்டுங்கள்.ஏழு என்ற எண் முக்கியத்துவம் வாய்ந்தது.திருக்குறளில் உள்ள சொற்களின் எண்ணிக்கை ஏழு ,ஒரு வாரத்தின் நாட்கள் ஏழு,வானவில்லில் உள்ள வண்ணங்களின் எண்ணிக்கை ஏழு ஆகும்.எனவே ஏழு என்ற எண் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
                     வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்.தோல்விதான் வெற்றிக்கு அறிகுறி.தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது.நம் உயிரைவிட மேலானது ஒழுக்கம் ஆகும்.வள்ளுவர் பொய் சொல்லக்கூடாது என்று சொல்லி உள்ளார்.மனம் போன போக்கில் போகக்கூடாது.சரியான பாதையில் செல்ல வேண்டும்.,அறிவு , மனம் கேட்ட பக்கம் போகாமல் நல்ல விஷயத்தில் மனதை உட்கார வைக்க வேண்டும்.
                              வேலையில்  பெரிய வேலை ,சின்ன வேலை என்று எதுவும் கிடையாது.நாம் செய்யும் வேலையை சரியாக செய்தால் அதுவே பெரிய வேலையாகும்.இதை தான் வள்ளுவர் சொல்லி உள்ளார்.
                                நாம் அனைவரும் கையில் வாட்ச் காட்டுகிறோம்.அந்த வாட்சின் மொத்த எழுத்துக்கள் ஐந்து.ஐந்தெழுத்து மந்திரத்தை நான் உங்களுக்கு சொல்லி கொடுக்கின்றேன்.

WATCH  Your Words  - பேசுவதைக் கவனமாக பேசு 

WATCH Your Action - செய்யும் செயலை சரியாகப் செய்ய வேண்டும் 

WATCH Your Thoughts - எண்ணங்கள் சரியாக இருக்க வேண்டும்.

WATCH Your Character - நடத்தை சரியாக இருக்க வேண்டும்.

WATCH Your Heart - அன்பு இதயத்தில் இருக்க வேண்டும்.

              இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை நாம் நமது மனதில் இருத்தினால் அனைத்தும் நன்றாக இருக்கும்.
                            உங்கள் பெயரின் அர்த்தத்தை நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள்  வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.இவ்வாறு பேசினார்.
                                   சமோய்ஜிதிமாக பதில் சொன்ன ஜனஸ்ரீ ,கோட்டையன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்து மாணவர்கள் கருத்து கூறுகையில் :
மாணவர் கோட்டையன் : சார் அருமையான விஷயங்கள் சொன்னார். மிக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.வேலையின் விவரத்தினை விளக்கமாக கூறினார்.நானும் வாழ்க்கையில் எனக்கு பிடித்த வேலை பார்த்து நல்ல நிலைக்கு வருவேன்.


மாணவி காயத்ரி : சார் சொன்ன  வாட்ச் தொடர்பான தகவலை மறக்காமல்  எனது மனதில் வைத்து கொள்வேன்.திருக்குறளை இன்னும் அதிகம் படிப்பேன்.நல்ல எண்ணங்களை மேம்படுத்தி நல்ல செயல்களை செய்வேன்.

மாணவி ஜெயஸ்ரீ : ஏழு என்ற எண்ணின் முக்கியத்துவத்தை சார் சொல்லி எங்களுக்கு திருக்குறளின் விளக்கத்தை புரிய வைத்தார்கள்.நான் இன்னும் அதிகம் திருக்குறளை படிப்பேன்.வாழ்க்கைக்கு தேவையான அனைத்து  விசயங்கள் திருக்குறளில் இருப்பதாக சார் சொன்னார்கள்.மிக்க நன்றி.












No comments:

Post a Comment