Sunday, 3 December 2017

                                
 சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.



  நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் கார்த்திகேயன் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில்    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி  மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.மாணவர்களிடையே மாற்று திறனாளிகளுக்கு உதவும் எண்ணங்களை ஏற்படுத்தி கொள்ளவும், அவர்களை சகோதர்களாக எண்ணி உதவவும் வகையிலும் கருத்துக்களை எடுத்துரைத்த மாணவர்கள் ஜெனிபர் ,காயத்ரி,கோட்டையன் ,நித்யகல்யாணி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.நிறைவாக மாணவர் அஜய்பிரகாஷ் நன்றி கூறினார்.மாணவர்களை மகிழ்விக்கும் வண்ணம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.மாற்று திறனாளி மாணவர்களுக்கு எவ்வாறு உதவலாம்,அவர்களுக்கு உள்ள சிரமங்கள் என்ன  என்பதை மாணவர்களின் மூலம் நாடகமாக நடித்து காண்பிக்கப்பட்டது.
 

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி  நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசு வழங்கினார்.

No comments:

Post a Comment