மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி
பெறும் நடுநிலைப்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு
மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்புரை வழங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு முன்னிலை வகித்தார். விழாவிற்கு தேவகோட்டை ஜமீந்தார் சோம.நாராயணன் தலைமை தாங்கி
ஓவிய போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசின் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினர். மாநில அளவில்
தேசிய ஆற்றல் துறை சார்பாக "தேசிய எரிசக்தி சேமிப்பு
விழிப்புணர்வு" என்ற தலைப்பில்
பள்ளி அளவிலான எரிசக்தி சேமிப்பு ஓவியப் போட்டி நடைபெற்றது.போட்டியில் பள்ளியில் உள்ள அனைத்து
மாணவர்களும் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் 4ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு
வரை உள்ள பிரிவில் 4ம் வகுப்பு கிஷோர்குமார் முதல் பரிசையும்,6ம வகுப்பு காயத்ரி
இரண்டாம் பரிசையும்,7, 8 வகுப்பு பிரிவில் 8ம் வகுப்பு
மாணவர் பரத்குமார் முதல் பரிசையும் ,7ம் வகுப்பு
மாணவர் விக்னேஷ் இரண்டாம் பரிசையும்
பெற்றனர்.மொத்தத்தில் போட்டியில் கலந்துகொண்ட மாணவியர்
அனைவருக்கும் சுமார் 60 மாணவ,மாணவியர்க்கு
மத்திய அரசின் பங்கேற்பு சான்றிதள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவ,மாணவியர்க்கு
பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி
செய்திருந்தார்.விழாவின்
நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.விழாவில்
முன்னதாக மாணவர்கள் ஐயப்பன்,பிரஜீத் ,ஜெயஸ்ரீ,தனலெட்சுமி,கார்த்திகா ,கீர்த்தியா
ஆகியோர் திருப்பாவை,திருவெம்பாவை,பொன் மழைப்பாடல்கள் ,கோளறு பதிகம்,திருவீழிமிழலை
போன்ற பாடல்களை பாடினார்கள்..
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசு சான்றிதள்
வழங்கும் விழா நடைபெற்றது. தேவகோட்டை ஜமீந்தார் சோம.நாராயணன் மாணவ,மாணவியர்க்கு
மத்திய அரசு சான்றிதழ்களை வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் உள்ளார்.
No comments:
Post a Comment