Wednesday, 22 March 2017

உலக தண்ணீர் தினம்
வீடியோ காட்சிகளின் மூலம் தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர்
மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர்
விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல்
தேவகோட்டை - உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வீடியோ காட்சிகளின் மூலம் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


                     நிகழ்ச்சியில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினர்.குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேரா.விமலேந்திரன் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக வீடியோ படங்கள் காண்பித்து சிறப்புரையாற்றி பேசுகையில் , உலக தண்ணீர் தினம் என்பதுமுதன் முதலாக 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வழியாக முதன் முதலாக அறிவிக்கப்பட்டது.ஒரு சொட்டு நீர் இரண்டு மடங்கு வருவாய் தரும்.உலகத்தில் 21 விநாடிகளுக்கு ஒரு குழந்தை தண்ணீர் இல்லாமல் இறந்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.எனவே மாணவர்களாகிய நீங்கள் இளம் வயது முதலே தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.முற்காலத்தில் தண்ணீர் சேமிக்கும் இடங்களை நமது முன்னோர்கள் 47 வகைகளில் வகை படுத்தி நீரை சேமித்து பயன்படுத்தி உள்ளனர்.என்று பேசினார்.தண்ணீர் சேமிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சு மற்றும் ஓவிய  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தனலெட்சுமி,உமா மகேஸ்வரி,கார்த்திகேயன்,கார்த்திகா,பரத்குமார்,பரமேஸ்வரி  ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் ; உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வீடியோ காட்சிகளின் மூலம் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அதனில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை பேராசிரியர் விமலேந்திரன் சிறப்புரையாற்றி தண்ணீர் சேமிப்பு தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தண்ணீர் சேமிப்பு தொடர்பாக மேலும் கூடுதல் தகவல்கள்


நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு.

 வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர்.

கடந்த 1992ஆம் ஆண்டு அய்.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண் டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படு கிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக் குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கோளில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறை களாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.

உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாச டைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப் பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப் பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரி யாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள் ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறதாம்

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி யது
நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது
குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்.

நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் இளம் வயதில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடவேண்டும்.

No comments:

Post a Comment