பணமில்லா பரிவர்த்தனை செய்வதற்கான பயிற்சி
டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை விழிப்புணர்வு
ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் பயிற்சி
மொபைல் போனை மணிபர்ஸாக மாற்றுவதற்கான பயிற்சி
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணமில்லா பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை செய்வதற்கான பயிற்சி நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் வங்கியின் வேல்முருகன் வங்கி தொடர்பான பணமில்லா பரிவர்த்தனை மூலம் ட்ரெயின்,பஸ் ,தியேட்டர் டிக்கெட் எடுப்பது தொடர்பாகவும்,எ .டி .எம் பயன்பாடு தொடர்பான தகவல்களையும்,யாரும் தெரியாத நபர்கள் வங்கியில் பயன்படுத்தும் ரகசிய எண்களை கேட்டால் கொடுக்க கூடாது.யாரிடமும் நமது வங்கி தொடர்பான தகவல்களை சொல்ல கூடாது.திருச்சி மண்டல ஸ்டேட் வங்கி அதிகாரி ஏபுல் சாலமன் இ வால்ட் எவ்வாறு டவுன் லோட் செய்வது என்றும்,அதனை டவுன் லோட் செய்தும் காண்பித்தார்.பணத்தை எந்த நேரம் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் மொபைல் போன் வழியாக மாற்ற முடியும் என்றும்,இனி வரு காலங்களில் கடைகளில் பொருள் வாங்கும்போது பர்ஸ் இல்லாமல் செல்லலாம் என்றும்,பட்டி வழியாக கடைகளில் மெர்ச்சண்ட் பட்டி என்பதன் வழியாக எளிதாக பொருள்களை வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.மொபைல் போனை யாரிடமும் கொடுக்க கூடாது என்றும் தெரிவித்தார்.தேவகோட்டை ஸ்டேட் வங்கி அலுவலர் கிருஷ்ணவேணி,திருச்சி மண்டல அலுவலக அலுவலர் கார்த்திக் ஆகியோர் டிஜிட்டல் முறையிலான பணமில்லா பரிவர்த்தனை தொடர்பான ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் கூறினார்கள்.அனைத்து ஆசிரியர்களுக்கும் மொபைல் போன் வழியாக ரூபாய் 10 வங்கி அதிகாரிகளின் கணக்கிலிருந்து பணம் அனுப்பி பரிட்சார்த்த முறையில் கற்று கொடுக்கப்பட்டது.அதே போல் ஆசிரியர்களும் மீண்டும் பணம் அனுப்பி பரிசோதனை செய்து பார்த்தனர்.முதன்முதலில் எ .டி .எம்.வந்த புதிதில் அனைவரும் பயன் படுத்த தயங்கிய நிலையில் இன்று அனைவரும் பயன்படுத்துவதை போல இனி வரும்காலங்களில் அனைவரும் மொபைல் போன் மூலம் மணி பர்ஸ் இல்லாமல் பணமில்லா பரிவர்த்தனை செய்யலாம் ,அதுவும் எளிதாகி விடும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு மொபைல் போன் மூலமாக பணமில்லா பரிவர்த்தனை செய்வதற்கான பயிற்சி நடைபெற்றது.ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் வேல்முருகன்,திருச்சி மண்டல ஸ்டேட் வங்கி அதிகாரி ஏபுல் சாலமன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

No comments:
Post a Comment