மாரத்தான் போட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியருக்கு பாராட்டு
தேவகோட்டை- காரைக்குடியில் நாச்சியப்ப சுவாமிகளின் 5வது குருபூஜை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அதிகாலை 4.40 மணிக்கெல்லாம் பெற்றோர் வர இயலாத சூழ்நிலையில் ஆசிரியர் கருப்பையா 10 மாணவ,மாணவியரை தேவகோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்து மூலம் அழைத்து கொண்டு காரைக்குடியில் பை பாஸ் ரோட்டில் ஆரம்பித்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க வைத்தார்.மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று கடைசி வரை குறிப்பிட்ட இடமான கோவிலூர் மடத்தை அடைந்தனர்.இவர்களுக்கு பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தார்கள் .முதல் தலைமுறையாக இவர்கள் மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.பெற்றோர் அழைத்து செல்ல இயலாத சூழ்நிலையில் (பெற்றோர் கூலி வேலை பார்ப்பதால் ) பள்ளியின் ஆசிரியர்களே காலை வேளையில் பேருந்து மூலம் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment