Wednesday, 31 August 2016

அரசு பணியில் உள்ள 1.9 சதவிகிதத்தினரில் 0.6 சதவிகிதத்தினர் விளையாட்டு வீரர்கள் 

 அரசு உடற்கல்வியியல் முதல்வர் பேச்சு

விளையாட்டு துறையால் வசப்படும் வாய்ப்புகள் 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு துறை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் அரசு பணியில் உள்ள விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 0.6 சதவிகிதம் என அரசு உடற்கல்வியியல் முதல்வர் பேசினார்.


                                   நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தர் மாணவர்களிடம் விளையாட்டு துறையால் வசப்படும் வாய்ப்புகள் குறித்து பேசுகையில் : மொத்தமுள்ள மக்கள் தொகையில் 1.9 சதம் அரசு பணியில் உள்ளனர்.அதனில் 0.6 சதம் அரசு ஊழியர்கள் விளையாட்டு வீரர்கள் ஆவார்கள்.கடுமையாக உடல் உழைப்பு கொடுத்தால் மட்டுமே விளையாட்டு துறையில் வெற்றி இலக்கை அடையலாம்.மாவட்ட,மாநில ,தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்  வெற்றி பெற முறையே  தொடர்ந்து தினசரி ஒரு மணி நேரமும்,இரண்டரை மணி நேரமும், நான்கு மணி நேரமும் விளையாட வேண்டும்.200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற ஒரு வரம் முழுவதும் 40 கிலோமீட்டர் தொடர்ந்து ஓடி பழக வேண்டும்.விளையாட்டு துறையில் ஆர்வம் இருந்தால் அரசு இலவசமாக விளையாட்டு பள்ளிகள்,கல்லூரிகள் நடத்துகிறது.அதனில் சேர்ந்து விட்டால் நமக்கு நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்.அரசின் அனைத்து  துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு என தனி வேலை வாய்ப்பு உள்ளது.தடகளம் - தடை தாண்டி ஓடுதல்,நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல்,ஹாக்கி , கை பந்து,டென்னிஸ்,கால் பந்து,குண்டு எறிதல்,ஈட்டி எறிதல்,தட்டு எறிதல் என பல்வேறு வகையான விளையட்டுகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.தடகள சங்கம் மூலமாக 14,18,20 வயத்துக்குட்பட்டவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுவது தொடர்பாக விளக்கம் அளித்தார்.உடற் பயிற்சி செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்றும்,குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து உடற் பயிற்சி செய்ய வைக்கலாம் என்றும்,அம்மா சிறுவயதில் கையை பிடித்து செய்யும் செயல்களே உடற்பயிற்சிதான் என்றார்.விளையாட்டு துறையின் மூலம் வேலை கிடைத்தால் நமக்கு வருமானம் கிடைப்பதுடன் நல்ல புகழும் கிடைக்கும். கடுமையான பயிற்சியினால் மட்டுமே ஒலிம்பிக் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற முடியும் .இவ்வாறு பேசினார்.மாணவர்கள் ஜெனிபர் ,தனலெட்சுமி,ஐயப்பன்,பரமேஸ்வரி,நந்தகுமார்,பரத்,ஜீவா ,ராஜேஷ்,விஜய் உட்பட பல மாணவர்கள் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.


 பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு துறையால் வசப்படும் வாய்ப்புகள் தொடர்பாக காரைக்குடி  அழகப்பா உடற்கல்வியியல் முதல்வர் சுந்தர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.

No comments:

Post a Comment