Tuesday, 2 August 2016
கற்பித்தலில் புதுமை : தமிழக அரசின் ஆவண படம் வெளியீடு கற்பித்தலில் புதுமை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கற்பித்தல் நிகழ்வுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விரிவாக எடுத்து சொல்லும் " அனுபவம் புதுமை " என்கிற தலைப்பிலான வீடியோ பதிவினை YOU TUBE வாயிலாக https://www.youtube.com/watch?v=DHSKxC40YaE&list=PLrEkyHXS85XtjFLXUNdWGu3lHnNvFzPPk&index=4 மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT )வெளியிட்டுள்ளது. பள்ளியில் நடைபெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகளை மிக அழகாக எடுத்து சொன்னதுடன் உலக அளவில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிகழ்வுகளை கொண்டு சென்றுள்ள SCERT யில் உள்ள அனைவருக்கும் நன்றிகள் பல.தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களை தேர்வு செய்து அதனை ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முக திறமைகளை வெளி காண்பிக்கும் நோக்கில் இதனை செய்து வரும் புதிய முயற்சிக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனதிற்கு மிகுந்த நன்றிகள் பல. இதனை கீழக்கண்ட LINK வாயிலாக காணலாம் : https://www.youtube.com/watch?v=DHSKxC40YaE&list=PLrEkyHXS85XtjFLXUNdWGu3lHnNvFzPPk&index=4 இதனை பார்த்தபோது அனைத்து மாணவர்களும் ,ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.Chokalingam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment