பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழுக்களை நீக்க அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்குதல்
தமிழக சுகாதார துறை ஏற்பாடு
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை மாணவி சின்னம்மாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தாங்கினார் .சுகாதாரத்துறை
சார்பில் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
வழங்கப்பட்டது..மத்தியரசு சார்பில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை
ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரை
வழங்கப்பட்டது.பொதுவாக குடலில் சாட்டைப் புழு,உருண்டை புழு,நாடாப்புழு ஆகிய மூன்று புழுக்கள் இருக்கும்.இதில் உருண்டை புழு நமது உடலில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்களை உறிஞ்சும்.இதர இரு புழு வகைகள் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.இதனால் வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்,சத்துக்கு குறைபாடு உள்பட நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகிறோம்.அல்பெண்டோஸால் மாத்திரைகள் உண்பதால் இந்த புழுக்கள் அழிந்து உடலின் ஊட்டச்சத்து பாதுகாக்கபடுகிறது.மாத்திரை கொடுப்பதுடன் கை கழுவுதல்,கழிப்பறைகள் சுத்தமாக பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு உடன் ரத்த
சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள்
வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும்
வழங்கப்பட்டது.விழா நிறைவாக ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு
நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
நடைபெற்றது.மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
No comments:
Post a Comment