Tuesday, 26 April 2016

                                    பிஞ்சுகள் செய்த தேர்தல் விழிப்புணர்வு 

புதிய முறையில் 100 சதவிகிதம் வாக்காளர் விழிப்புணர்வு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் புதிய முறையில் தபால் மூலம் தேர்தல் தகவல் குறித்து கார்டு எழுதி பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவிகித ஒட்டு பதிவிற்கான வாக்காளர் விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தபால் அட்டை வாயிலாக தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

Monday, 25 April 2016

 தினமலர் - பட்டம் இதழ் பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி -

         தினமலர் பட்டம் இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் படங்களை இன்று (25/04/2016) பார்த்ததில் மாணவர்களுக்கு பெறும் மகிழ்ச்சி.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஆசிரியர் சார்பாக மாணவர்கள் அனைவருக்கும் தினமலர் ( பட்டம் ) நாளிதழ் அதிக எண்ணிக்கையில் வாங்கி வந்து கொடுத்தனர்.அதனை ஆர்வமுடன் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இன்றைய தினத்தை பட்டத் திருவிழாவாக கொண்டடி மகிழ்ந்தனர்.
கோடை FM 100.5 இல் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியர் பங்கேற்கும் நிகழ்ச்சியை தற்போது கேளுங்கள் 


 நண்பர்களே இப்போது 4.15 முதல் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் ,ஆசிரியை பங்கேற்கும்  பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை கோடை FM 100.5 இல் இப்போது முதல் 5 மணி வரை கேளுங்கள் 

Saturday, 23 April 2016

உள்ளூர் தொலைக்கட்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சி தொகுப்பு நேரடி ஒளிபரப்பு 



            காதில் குளிர்பானம் குடித்தல் ,வெறும் கையால் திருநீறு வரவைத்தல் போன்ற மந்திரங்களை ,அறிவியல் தொடர்பான விளக்கங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் அறிவியலாளர்  சேது ராமன் அறிவியல் தொடர்பாக செய்து காண்பிக்கும் மேஜிக்  செயல்பாடுகளை இன்று (23/04/2016) சனிக்கிழமை  மாலை 5  மணி அளவில் தேவகோட்டை மித்ராஸ் உள்ளூர் தொலைக்காட்சி சானலில் அனைவரும் காணுங்கள்.ரூபாய் 10,000 செலவில் நடத்தப்பட்ட இந்த அறிவியல் தொடர்பான நிகழ்ச்சியை அனைவரும் கண்டு மகிழுங்கள்.

Thursday, 21 April 2016



தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா 

Saturday, 16 April 2016

லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ கூடாது 

காவல் ஆய்வாளர் பேச்சு 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ கூடாது என பேசினார்.

Wednesday, 13 April 2016

பள்ளி மாணவர்களின் நாடகம்,கும்மி நடனம்,கவிதை,ஆங்கில பேச்சு 
100 சதவிகித வாக்காளர் விழிப்புணர்வு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக நடராஜபுரம் சின்ன மாரியம்மன் கோவில் முன்பாக 100 சதவிகித வாக்காளர் விழிப்புணர்வு வலியுறுத்தி  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Sunday, 10 April 2016

 முதல் தலைமுறையாக விருது (SHIELD) பார்த்து மகிழ்ந்த பெற்றோர் 

 விருது (SHIELD) பெறும் அனுபவம் புதுமை - தொடக்க நிலை மாணவர்கள் கருத்து 

 1ம் வகுப்பு படிக்கும்போதே விருது (SHIELD)  பெற்றது நெகிழ்ச்சியான ,மகிழ்ச்சியான நிகழ்வு - 1ம் வகுப்பு மாணவி திவ்ய ஸ்ரீ பேச்சு 

SHIELD என்கிற விருது பெறும் நிகழ்வு அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள 1ம் வகுப்பு முதல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான நிகழ்வு 


Friday, 8 April 2016


பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்

விருது வழங்கும் விழா

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Wednesday, 6 April 2016

பெற்றோர்களிடம் சொல்லி 100 சதவிகித வாக்களிக்க செய்யுங்கள்

வட்டாட்சியர் பேச்சு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 100 சதவிகித வாக்களிப்பதர்க்கான விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டி நடை பெற்றது.




 கண்ணாடியை திண்ணும் வித்தை எப்படி ? மந்திரமா ,தந்திரமா ?
அறிவியல் நிகழ்ச்சியில் ருசிகரம்

காதில் குளிர்பானம் குடிப்பது எப்படி ? அறவியல் உண்மை விளக்கம்


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு  அறிவியல் மேஜிக் ஷோவும்,அதன் தந்திரங்களும் சொல்லப்பட்டது.