Sunday, 10 April 2016

 முதல் தலைமுறையாக விருது (SHIELD) பார்த்து மகிழ்ந்த பெற்றோர் 

 விருது (SHIELD) பெறும் அனுபவம் புதுமை - தொடக்க நிலை மாணவர்கள் கருத்து 

 1ம் வகுப்பு படிக்கும்போதே விருது (SHIELD)  பெற்றது நெகிழ்ச்சியான ,மகிழ்ச்சியான நிகழ்வு - 1ம் வகுப்பு மாணவி திவ்ய ஸ்ரீ பேச்சு 

SHIELD என்கிற விருது பெறும் நிகழ்வு அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள 1ம் வகுப்பு முதல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான நிகழ்வு 




நண்பர்களே ,தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் மரம் நட்டதை பாராட்டும் விதமாக விருது வழங்கப்பட்டது. முதலில் பரிசு பொருள் கொடுக்கலாம் என நினைத்து பின்பு  1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கல்லூரியில் சென்று மரம் நட்டத்தை பாராட்டும் விதமாக அனைவருக்கும் விருது (SHIELD) வழங்கலாம் என முடிவு செய்து பள்ளியில் வழங்கினோம்.
                                                  
                              விருது (SHIELD) முதன் முறையாக பார்க்கும் பெற்றோர்

                           சுமார் 90 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.பெருவாரியான பெற்றோர்கள் விருது (SHIELD) என்பதை நாங்கள் இப்போது தான் பார்க்கிறோம்.அது எப்படி இருக்கும் என்பதை பார்த்து செல்லவே வந்தோம்.விருதுகளை எங்கள் பிள்ளைகள் பெறும்போது மிகுந்த சந்தோசம் கொடுத்தது என்றனர்.


                                 விருது (SHIELD) பத்திரமாக வைத்து கொள்வோம் 

                       விருது (SHIELD) பெற்றுக்கொண்ட    1ம் வகுப்பு மாணவி திவ்ய ஸ்ரீ உட்பட 8ம் வகுப்பு மாணவி சௌமியா வரை பேசிய அனைத்து மாணவ,மாணவியரும் இந்த நிகழ்வு எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும்.எங்கள் காலம் உள்ள வரை இதனை பத்திரமாக வைத்து பாதுகாப்போம் என்று  ஆனந்த கண்ணீர் மல்க பேசினார்கள்.நாங்களும் பிற்காலத்தில் பலருக்கு இது போன்று விருது (SHIELD), வழங்குவதுடன் , நாங்களும் பெறவும் செய்வோம் என்றனர்.

                                        தலைமை ஆசிரியரின் அனுபவம்

          நண்பர்களே, எனக்கு விவரம் தெரிந்து எனது பள்ளியில், கல்லூரியில் பல பரிசுகளை பெற்றுள்ளேன்.அவை அனைத்தும் மெடல் ஆக இருக்கும் அல்லது பாராட்டு சான்றிதழாக இருக்கும்.உண்மையில் விருது SHIELD என்பதை JCI இல் சேர்ந்த பிறகுதான் செயல்பாடுகளை பாராட்டும் விதமாக பெற்றேன். அதன் பிறகு தொடர்ந்து பெற்று வரும் விருது (SHIELD) பலவற்றை எனது வீட்டில் ,பள்ளியில் பத்திரமாக வைத்து உள்ளேன்.அவற்றை எப்போதெல்லாம் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் நமது செயல்பாடுகள் நமக்கு சந்தோசத்தை தரும்.

                                    அனைத்து மாணவர்களுக்கும் அனுபவம் புதுமை
                                        
                                 எனவே இதனை அரசு உதவி பெறும் பள்ளியான இப் பள்ளி மாணவர்களுக்கு இளம் வயதில் வழங்கினால் நன்றாக இருக்கும்,புதிய அனுபவமாக இருக்கும் என்று எண்ணினோம்.அதன் தொடர்ச்சிதான் இந்த விருது (SHIELD) வழங்கும் விழா.அதுவும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விருது (SHIELD) வழங்கப்பட்டது.இது மாணவர்களுக்கும்,எனக்கும்,பள்ளி ஆசிரியர்களுக்கும் ,இதனை படிக்கும் உங்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் நிச்சயம் மறக்க முடியாத சந்தோஷமான நிகழ்வாக இருக்கும் என்பது உண்மை. 

                                         அனுபவம் புதுமை என்பதன் பயன்

            மேலும் பள்ளியில் மாணவிகள் இருவர்   கடந்த இரண்டு ஆண்டுகளில் தாங்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ,பல ஊர்களுக்கு சென்று வந்தது தொடர்பான தங்களது  கற்றலில் முன்னேற்றம் அனுபவம் புதுமை என்பதை விளக்கி பேசியதுடன் , கடந்த இரண்டு ஆண்டுகளில் தாங்கள் பெற்றுள்ள 25க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் காண்பித்து தங்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து மாணவி தனம் மற்றும் தனலெட்சுமி ஆகியோர் பேசியதை பார்த்து விவசாய கல்லுரி தாளாளர் சேது குமணன் அவர்கள் மாணவிகள் தைரியமாக மேடையில் குறிப்பு எதுவும் இல்லாமல் அருமையாக பேசியதை பாராட்டி, அம்மாணவிகளின் உயர்கல்விக்கு தான் பொறுப்பேற்று படிக்க வைப்பதாக மேடையில் உறுதி அளித்தார்.கல்வியில் சிறப்பு பாராட்டு பெறுவது வாழ்த்த பட வேண்டியது ஆகும்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம் .
செல் : 9786113160
jeyamchok@gmail.com
www.kalviyeselvam.blogspot.com

No comments:

Post a Comment