Monday, 25 April 2016

 தினமலர் - பட்டம் இதழ் பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி -

         தினமலர் பட்டம் இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் படங்களை இன்று (25/04/2016) பார்த்ததில் மாணவர்களுக்கு பெறும் மகிழ்ச்சி.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஆசிரியர் சார்பாக மாணவர்கள் அனைவருக்கும் தினமலர் ( பட்டம் ) நாளிதழ் அதிக எண்ணிக்கையில் வாங்கி வந்து கொடுத்தனர்.அதனை ஆர்வமுடன் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இன்றைய தினத்தை பட்டத் திருவிழாவாக கொண்டடி மகிழ்ந்தனர்.


                                     நண்பர்களே , அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர் பொதுவாக சமுதாயத்தின் பின்தங்கிய நிலையிலும் ,பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருந்து இப்பள்ளிகளில்  பயின்று வருகின்றனர்.அவர்களது படங்கள் ,பெயர்கள் செய்திதாள்களில் வெளி வருகையில் அவர்கள் அதனை அவர்களது 70,80 வயது வரையிலும் வைத்து பாதுகாப்பாக,சந்தோசமாக பார்த்து வருவார்கள்.அதுவும் தொடக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கு நல்ல கல்வியோடு இது போன்று , இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகள் அவர்களுக்கு பல்வேறு ஊக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்பது உண்மை.

                                 சுட்டி விகடன் போன்று பல்வேறு பத்திரிக்கைகளில் அரசு உதவி பெறும் மாணவ,மாணவியரின் படங்கள் ,பெயர்கள் வெளி வருவதை மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக ஆனந்தத்துடன் பார்க்கின்றனர். அவர்களது பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் படங்கள்,பெயர்கள் முதல் தலைமுறையாக வெளி வருவதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்.அதனை அவர்கள் உற்றார்,உறவினர்,அக்கம் ,பக்கம் வீடுகளில் காண்பித்து மகிழ்கின்றனர்.இதற்காக சுட்டி விகடன் உட்பட அனைத்து இதழ்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment