லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ கூடாது
காவல் ஆய்வாளர் பேச்சு
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ கூடாது என பேசினார்.
விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளார் ரமேஷ் சிறப்புரை வழங்கி பேசுகையில் , சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வமாக இருந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள்.போட்டிகளில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவதுடன்,தோல்வியுற்றாலும் போட்டியில் பங்கு கொண்டதற்கு எண்ணி பெருமைபடுங்கள். போட்டியில் பரிசு பெற்றாய என்பது முக்கியம் இல்லை.பங்கு பெற்றாய என்பது தான் முக்கியம்.எனவே அனைவரும் தொடர்ந்து விளையாட்டு போட்டியில் பங்கு பெறுங்கள்.எந்த காலத்திலும் லஞ்சம் வாங்கவும் மாட்டோம்,லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் என உறுதி எடுத்து கொள்ளுங்கள்.அந்த ஊறுதியுடன் இளம் வயதில் இருந்து உங்கள் வாழ்கையை நல்ல முறையில் தொடங்குங்கள் என்றார்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவியர்க்கு விருதுகளை வழங்கினார்.ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியை முத்து லெட்சுமிக்கும்,ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர் கருப்பையாவிற்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.நிறைவாக மாணவிகள் சௌமியா,பரமேஸ்வரி,காயத்ரி,தனலெட்சுமி ஆகியோர் பேசினார்கள்.பெற்றோர்கள் கற்பகம்,சத்தியா ,லெட்சுமி ஆகியோர் பேசினார்கள். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.விழாவில் ஏராளமான பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் எட்டாம் வகுப்புக்கான சாக்கு ஓட்ட பந்தயம் போட்டியில் முதலிடம் பெற்ற யோகேஸ்வரனுக்கும் ,இரண்டாமிடம் பெற்ற கிருஷ்ணகுமார்க்கும், ஏழாம் வகுப்பில் இடம் மாற்றுதல் போட்டிகளில் முதலிடம் பெற்ற சாய் புவனேஸ்வரனுக்கும் ,இரண்டாமிடம் பெற்ற பரத் குமார்க்கும், ஆறாம் வகுப்பில் ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்ற த . ராஜேஷுக்கும்,இரண்டாமிடம் பெற்ற பா. ராஜேஸ்க்கும் , ஐந்தாம் வகுப்பில் ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்ற கார்த்திகேயனுக்கும்,கஜேந்திரனுக்கும்,நான்காம் வகுப்பில் தவளை ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஐயப்பனுக்கும், இரண்டாமிடம் பெற்ற சபரிக்கும்,மூன்றாம் வகுப்பில் குதிகாலில் நடத்தல் போட்டியில் முதலிடம் பெற்ற கிஷோர்குமார்க்கும்,இரண்டாமிடம் பெற்ற ஈஸ்வரனுக்கும்,இரண்டாம் வகுப்பில் முதலிடம் பெற்ற புகழேந்திக்கும் ,இரண்டாமிடம் பெற்ற வெங்கட்ராமனுக்கும் , முதல் வகுப்பில் பலூன் உடைத்தல் போட்டியில் முதலிடம் பெற்ற ஆகாஷுக்கும் ,இரண்டாமிடம் பெற்ற சத்தியாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.மேலும் பெண்கள் பிரிவில் எட்டாம் வகுப்புக்கான தண்ணீர் பாட்டிலில் நிரப்புதல் போட்டியில் முதலிடம் பெற்ற தனத்துக்கும், ,இரண்டாமிடம் பெற்ற ராஜலேட்சுமிக்கும் , ஏழாம் வகுப்பில் லெமன் ஸ்பூன் போட்டிகளில் முதலிடம் பெற்ற பரமேஸ்வரிக்கும், ,இரண்டாமிடம் பெற்ற கார்திகவுக்கும், ஆறாம் வகுப்பில் நொண்டி ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்ற ஜெனிபர்க்கும் ,இரண்டாமிடம் பெற்ற காவியாவுக்கும் , ஐந்தாம் வகுப்பில் இடம் பிடித்தல் பந்தயத்தில் முதலிடம் பெற்ற மாதரசிக்கும் ,இரண்டாமிடம் பிடித்த சந்தியாவுக்கும் , நான்காம் வகுப்பில் பந்து உருட்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றவள்ளியமைக்கும் , இரண்டாமிடம் பெற்ற சிரேகாவுக்கும் ,மூன்றாம் வகுப்பில் முன்காலில் நடத்தல் போட்டியில் முதலிடம் பெற்ற ஜனஸ்ரீக்கும் ,இரண்டாமிடம் பெற்ற மகலெட்சுமிக்கும் ,இரண்டாம் வகுப்பில் நொண்டி ஓட்டத்தில் முதலிடம் பெற்ற திவ்யதர்ஷினிக்கும் ,இரண்டாமிடம் பெற்றதேவதர்ஷினிக்கும் , முதல் வகுப்பில் பலூன் உடைத்தல் போட்டியில் முதலிடம் பெற்ற அனுஷியவுக்கும் ,இரண்டாமிடம் பெற்ற திவ்யஸ்ரீக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.நிறைவாக ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விளயாட்டு விழாவில் விருது பெற்ற மாணவ,மாணவியருடன் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் ரமேஷ்,சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி சேது குமணன்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.
No comments:
Post a Comment