Thursday, 6 March 2025

பரிசளிப்பு விழா  

 சிந்தனை செய்து கேள்வி கேளுங்கள் 

முன்னாள் வங்கி மேலாளர்  பேச்சு 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

                                    ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி  தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் வங்கி மேலாளர்  சிதம்பரம் முன்னிலை வகித்தார். 

                                         முன்னாள் வங்கி மேலாளரும்,அறக்கட்டளை நிர்வாகியுமான  ஐயப்பன் பேசுகையில்,கொடுப்பதில் ஒரு இன்பம் .சிறிதுசிறிதாக செய்த உதவி இன்று பெரிய அளவில் செய்ய வசதியும் மனமும் இருக்கின்றது. 

                              மாணவர்கள் ஒவ்வொருவரும் பின்னாளில் தங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களின் முதற்கடமை படிப்பு.

                                 படிப்பதற்காக தான் பள்ளிக்கு வருகிறோம். பெற்றோர்கள் ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு படிக்க வேண்டும். 

                    ஒழுக்கமில்லாத படிப்பு பயன்படாது. ஒழுக்கம் என்றால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்று மாணவர்கள் சொல்லக்கூடாது.

                            பெற்றோருக்கு நம்மைவிட அதிகம் தெரியும். பெற்றோர்கள் சொல்வதை கேட்டால்தான் ஒழுக்கமாக வளர்வீர்கள். சிந்தனை செய்து கேள்வி கேட்கவேண்டும். சிந்தனைக்கும், திமிருக்கும் சிறு இடைவெளி தான். 

                            இந்த வயதில்தான் ஒழுக்கத்தை பழக முடியும். எவ்வளவு பெரிய மனிதர் இவ்வளவு சாதாரணமாக உள்ளாரே என்று நினைப்போம். அதுதான் ஒழுக்கம். உடல் நிலையை நாம் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். 

                             இந்த வயதில் தான் ஓடி ஆடி விளையாட முடியும். இரண்டு படிகளில் கூட ஒரே நேரத்தில் தாவ முடியும். எழுபது வயதுகளில் பெரும்பாலும் முடியாது. 

                             ஒழுக்கமாக வளர வேண்டும். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் . இவ்வாறு பேசினார்.ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

படவிளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் வங்கி மேலாளர்களும், அறக்கட்டளை நிர்வாகிகளுமான  சிதம்பரம், ஐயப்பன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கலந்துரையாடினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


 வீடியோ : https://www.youtube.com/watch?v=fvdabJ-2o_I

No comments:

Post a Comment