பரிசளிப்பு விழா
புத்தகம் வாசிப்புக்கு பரிசு வழங்கி அசத்திய பள்ளி
புத்தகங்களை வாசித்து அறிவை மேம்படுத்தி கொள்ளுங்கள்
அறிவோடு இருந்தால் நடப்பதெல்லாம் நன்மையாம்
வட்டாட்சியர் பேச்சு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நூலக புத்தகம் படித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் மாணவர்களின் வீட்டுக்கு நூலக புத்தகங்கள் வாரம் ஒரு முறை கொடுக்கப்படுகிறது.. புத்தகங்கள் படித்து வந்து, அதனை நல்ல முறையில் வெளிப்படுத்தி பேசிய மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தாலுகா வருவாய் ஆய்வாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தேவகோட்டை வட்டாட்சியர் சேது நம்பு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில் , மாணவர்கள் இந்த வயதில் படிக்கும் படிப்பு பசுமரத்தாணி போல அவர்கள் மனதில் பதியும். மாணவர்கள் டிகிரி முடித்து பி.எச்.டி. படிக்கும்போதுதான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க சொல்வார்கள்.
ஆனால் இந்த பள்ளியில் சிறு வயதிலேயே மாணவர்கள் நூலக புத்தகத்தை வாசித்து அதில் என்ன தெரிந்து கொண்டோம் என்பதை சொல்கிறார்கள்.
அறிவோடு இருந்தால் நடப்பதெல்லாம் நன்மையாம் என்பது போல இளமையில் கற்றுக்கொள்வது அப்படியே மனதில் பதியும்.
ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல் புத்தகத்தில் உள்ள பாடத்தை மட்டும் படிக்காமல் பாடத்துடன் வழிகாட்டியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
செயல்முறை விளக்கத்துடன் படிப்பு இருக்க வேண்டும் மாணவர்கள் அறிவியல் வளர்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறிவியல் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் சாப்பாடு மிகவும் முக்கியம். வேளாண் துறை பற்றி மாணவர்கள் நிறைய தெரிந்து கொண்டுள்ளனர்.
வாழ்க்கையோடு இணைந்த கல்வி மாணவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர். பெரிய, பெரிய அதிகாரிகளை அழைத்து வந்து இப்பள்ளியில் பேசவைப்பது மாணவர்களும் அவர்களை போல் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வதற்காகத் தான் என்பதை எண்ணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள். வளருங்கள் என்று பேசினார். என்று பேசினார்.
சிறந்த முறையில் புத்தகங்கள் வாசித்த மாணவர்கள் கனிஸ்கா ,ரித்திகா,தீபன்குமார்,ஜாய் லின்சிகா,ஏஞ்செல் ஜாய் ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நூலக புத்தகம் படித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.தேவகோட்டை வட்டாட்சியர் சேது நம்பு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் . தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தாலுகா வருவாய் ஆய்வாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=d_Ja3azItc8
No comments:
Post a Comment