Saturday 14 May 2022

 கைமணம் - உணவு அருமை 

 





                           நண்பர்களே சமீபத்தில் மதுரை வானொலி  நிலையம் சென்ற பொழுது எங்களது பள்ளி மாணவர்களுக்கும் எங்களுக்கும் மதிய உணவு எங்கே கிடைக்கும் என்று அஞ்சல் துறையில் பணியாற்றும் நண்பர் ஏஎஸ்பி திரு. சுப்பிரமணியன் அவர்களிடம் தகவல் கேட்டேன். 

                                   அவர்கள் உடனடியாக கைமணம் என்கிற உண்மையிலேயே மனமான சாப்பாடு தரக்கூடிய கேட்டரிங் வைஷ்ணவி என்பாருடைய எண்ணை அனுப்பி வைத்தார். நாங்களும் உடனடியாக கைமணம் நடத்திவரும் நிர்வாகியை தொடர்புகொள்ள (காலை  10:30 மணிக்கு)  தான் தொடர்பு கொண்டேன். ஒரு படி 750 ரூபாய் தயிர் சாதமாக வாங்கிக் கொள்ளலாம் என்றும், காயுடன் வேண்டுமென்றால் 800 ரூபாய் கொடுங்கள் என்றும் தெரிவித்தார் .

                     ஒரு படி தயிர் சாதத்திற்கு சுமார் பதினைந்து பேர் சாப்பிடலாம் என்றும் தெரிவித்தார். நாங்கள் இருபத்தி ஏழு பேர் இருந்தோம். எனவே இரண்டு படி தயிர்சாதம் ஆர்டர் கொடுத்தோம்.10. 50 மணி போல் நாங்கள் கொடுத்த ஆர்டர் சரியாக ஒரு மணிக்கு சுடச்சுட தயிர் சாதத்துடனும், நல்ல உருளைக்கிழங்கு மசாலுடன் எங்களை தேடி வந்தது. 

                                 அது போக மேலும் எதும் தேவை என்றாலும் நான் அருகிலுள்ள பிஎஃப் கேன்டீனில் தான் இருக்கின்றேன் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று மிகவும் அன்புடன் பேசி சென்றார்கள் . அவர்கள் சென்ற பிறகு அவர்களது தயிர் சாதத்தை நாங்களும் குழந்தைகளும் சாப்பிட்டோம். 

                                       மிகவும் அருமையான சுவையுடன் இருந்தது. மிக குறுகிய நேரத்தில் சுவையுடன் , போதிய அளவு சொன்னதுபோல் கொண்டு வந்த அம்மையாருக்கு எங்களது நன்றிகள் பல. வாழ்த்துக்களும். தொடர்பு எண் : 8489340760

 நட்புடன் 

லெ . சொக்கலிங்கம்,

 தலைமையாசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,

 தேவகோட்டை.

 சிவகங்கை மாவட்டம்

 

 

 

No comments:

Post a Comment