Saturday, 8 July 2017

வேந்தர் டிவி நடத்தும் இது உங்க மேடை நிகழ்ச்சிக்கான போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர் கார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் 



                        காரைக்குடியில் நடைபெற்ற வேந்தர் டிவி நடத்தும் இது உங்க மேடை நிகழ்ச்சிக்கான போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவரகள் ஐயப்பன் மற்றும் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் தனியார் பள்ளி மாணவர்கள் பலபேர் கலந்துகொண்டனர்.இதில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவர் கார்த்திகேயன் பங்குபெற்று முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.இம்மாணவரை பள்ளியின் வழியாக தயார் செய்து ,தேவகோட்டையில் இருந்து காரைக்குடி அழைத்து வந்து போட்டியில் பங்கேற்க வைத்த ஆசிரியை முத்து மீனாளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நாளை நடைபெற உள்ள இரண்டாவது சுற்றிலும் மாணவர் கார்த்திகேயன் வெற்றி பெற வாழ்த்துங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment