மாணவர்களின் மாற்று சான்றிதழ் பொக்கிஷமாக மாற வேண்டும்
கல்லூரி
முதல்வர் பேச்சு
பென்சிலால்
அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை
முன்னிட்டு ஓவியம்
மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.மாணவர்கள் பென்சிலால் அப்துல்கலாம் ஓவியத்தை வரைந்து அசத்தினார்கள்.
விழாவிற்கு வந்தவர்களை
பள்ளி ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை
வகித்தார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை
தாங்கி பேசுகையில் , அப்துல்கலாம் பயின்ற பள்ளியில் இன்று அவரது மாற்று சான்றிதழ்
மிகபெரிய பொக்கிஷமாக பாதுகாக்கபடுகிறது. விஞ்ஞானி மட்டுமல்ல ,மாணவர்களோடு
ஒருமித்தமான கருத்து உடையவர்.அதனால்தான் நாம் இன்றும் அவரை நினைவோடு வைத்துள்ளோம்.உங்களது
மாற்று சான்றிதழும் பொக்கிஷமாக மாறுமாறு உங்களது கனவுகளை உருவாக்கி கொள்ளுங்கள் .இவ்வாறு
பேசினார்.பேச்சு ,ஓவியம்,கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ராஜேஷ்,சபரி,காயத்ரி,ஈஸ்வரன், அம்மு
ஸ்ரீ,ஜெய ஸ்ரீ,முத்தையன்,யோகேஸ்வரன் ஆகியோர் பரிசுகள் பெற்றனர். நிகழ்வின் நிறைவாக
ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment