Saturday, 17 September 2016

                                 கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



                                நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவி சக்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண் தானம்
ஏ சி அறக்கட்டளை பொறுப்பாளர் அருணாச்சலம் கண்தானம் குறித்து பேசுகையில், இந்திய கண் வங்கிகளின் கூட்டமைப்பின் அறிக்கைபடி நமது நாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கருவிழி குறைபாட்டால் பார்வையற்றவர்களாக உள்ளனர்.அவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர்.ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில்தான் கண்தானம் பெறப்படுகிறது.நீரிழிவு,ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும்,கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண்ணாடி அணிந்து கொண்டவர்களும் கூட கண்தானம் அளிக்கலாம்.ஆனால் எய்ட்ஸ்,ராபீஸ்,புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களது கண்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்படும்.இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்கள் கொடுக்கப்பட வேண்டும்.கண் தானம் கொடுக்கும்போது  நபர் இறந்த உடன் கண்கள் உலர்ந்துவிடாமல் இருக்க மின் விசிறியை அணைத்துவிட வேண்டும்,அனால் குளிர்சாதனம் இருந்தால் அது இயங்கலாம்,ஒரு சிறிய தலையணையை பயன்படுத்தி தலையை சிறிது உயர்த்தி வைக்க வேண்டும்,கண் இமைகள் ஒழுங்காக மூடப்பட்டிருக்க வேண்டும்,இமைகளை ஈரத்துணியையோ,ஈரப்பஞ்சியையோ கொண்டு மூடி வைக்க வேண்டும்,ஒரு பொது மருத்துவரிடம்  இறப்பு சான்றிதழ் பெற்று தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்,உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவமனையை  தொடர்பு கொண்டு நமது முகவரியை தெரிவிக்க வேண்டும்,இவ்வாறு செய்தால் 20 நிமிட நேரத்தில் கண்களை எடுத்து செல்வார்கள்.நீங்கள் அனைவரும் உங்கள் அப்பா,அம்மாவிடம் ,பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கண்தானம் செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று பேசினார்.
                         மாணவர்கள் பரமேஸ்வரி,காயத்ரி,பரத்,செந்தில் ,ஜீவா ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக மாணவர் ரஞ்சித் நன்றி கூறினார்.

  பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண் தானம் ஏ சி அறக்கட்டளை பொறுப்பாளர் அருணாச்சலம் பேசினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment