Monday, 12 September 2016

                             பள்ளியில்  பாரதியார் விழா

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா  நடைபெற்றது.




                          விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர் ஜீவா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.விழாவில் மாணவர்கள்  ஜனஸ்ரீ ,ஐயப்பன்   பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை என்கிற பாடலையும், மாணவர்கள் கார்த்திகேயன்,ராஜேஸ்வரி,பாரதியாரின் புதுமை பெண் என்கிற தலைப்பில் அமைந்த கவிதையையும் பாடினார்கள்.மேலும் பாரதியார் படத்துக்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் பாரதியார்  படம் வரைதல் ஓவிய போட்டியில் ஆகாஷ்,பாலமுருகன்,அம்மு ஸ்ரீ,கிஷோர்குமார்,கிருத்திகா ,பரத்குமார்,ஹரிஹரன்,காயத்ரி ஆகியோர்   கலந்து கொண்டனர்.சிவகங்கையில் நடைபெற்ற தமிழ்நாடு காலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பாக நடைபெற்ற பாரதி விழா போட்டிகளில் பங்கு பெற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கும் ,தேவகோட்டையில் இருந்து சிவகங்கை அழைத்து சென்ற ஆசிரியர் ஸ்ரீதர்க்கும் பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.நிறைவாக மாணவர் சகா  நன்றி கூறினார்.மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதி  விழாவில் பாரதியார் படம் வரைதல்  மற்றும்  ஒப்புவித்தல் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர் ஸ்ரீதர் உள்ளனர்.

No comments:

Post a Comment