தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி பள்ளி மாணவர்கள் உதவி
தேவகோட்டை- தேவகோட்டையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உதவி செய்தனர் .
தேவகோட்டையில் சில நாட்களுக்கு முன்பு தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் வாழும் பகுதியில் தீடீர் தீ பிடித்ததால் அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் வீடுகள் உட்பட துணிகள் ( அடுத்த நேரம் துணி மாற்ற இல்லாத நிலையில் தீயில் கருகுதல் ) ,குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள், சாப்பிட தட்டு,சமைக்கும் பாத்திரங்கள் என அனைத்துமே தீயில் கருகியது.இதை அறிந்த தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இப்பள்ளியிலேயே அச்சமுதாயத்தில் இருந்து உடன் படிக்கும் மாணவ,மாணவியரின் குடும்பங்கள் அனைத்துக்கும் பயன்படும் வகையில் அவரவர் வீடுகளில் இருந்து பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள துணிகளை பெரும் எண்ணிகையில் பள்ளிக்கு கொண்டு வந்து அதனை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து ஆசிரியர்கள்,மாணவ,மாணவியர் முன்னிலையில் அச்சமுதாயத்தின் தலைவர் முருகன் மற்றும் முன்னாள் தலைவர் பாண்டியன் ஆகியோரிடம் கொடுத்தனர். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரும் ஆர்வத்துடன் உதவி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் அனைத்து மாணவர்களும் இவர்களது குடும்பங்கள் உள்ள வீடுகள் விரைவில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். சிறுவயதியிலேயே இவர்களது எண்ணங்கள் நல்ல விதமாக உதவுவதை சமுதாய தலைவர் முருகன் பாராட்டி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment