Tuesday 1 September 2015

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் படப்பிடிப்பு 



புதிய தலைமுறை (தொலைக்காட்சி  மற்றும் பத்திரிக்கை குழுமம் ) ஆசிரியர் விருது 2015 -க்கு தேர்வாகியுள்ள 
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பு நடத்தினர் .



இந்த புதிய தலைமுறை (தொலைக்காட்சி  மற்றும் பத்திரிக்கை குழுமம் ) ஆசிரியர் விருது 2015 பெறுவதற்கு தேர்வாக எனக்கு ஒத்துழைப்பு அளித்திட்ட அனைவருக்கும் எனது மனாமார்ந்த நன்றி.


           நண்பர்களே கடந்த வாரம் ஞாயிறு  அன்று நான் பணியாற்றும் பள்ளியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் படப்பிடிப்பு குழுவினர் விருது வழங்கும் அன்று ஒலிபரப்புவதர்க்காக திரு ALFREAD  பட இயக்குனர் அவர்களது தலைமையில்  கேமரா இயக்குனர்கள் லெட்சுமி நரசிம்மன் மற்றும் மகேந்திரன் ஆகியோருடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.மூன்று பேரின் செயல்பாடுகளும் பழகும் விதமும் மிகவும் நன்றாக இருந்ததது.அருமையான முறையில் அனைவரையும் பேட்டி எடுத்தனர்.எனக்கு பல்வேறு வழிகளில் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வரும் பள்ளி செயலர் திரு. A.R.சோமசுந்தரம் அவர்களுக்கும்,கல்வி முகவர் மீனாட்சி ஆச்சி அவர்களுக்கும்,ஞாயிறு விடுமுறை நாளாக இருந்தாலும்  பள்ளிக்கு வருகை தந்த 50க்கும் மேற்பட்ட பெற்றோர்களும்,முன்னாள் மாணவ,மாணவியரும் ,தேவகோட்டை நகராட்சி தலைவி திருமதி சுமித்ரா ரவிக்குமார் அவர்களும்,காரைக்குடி CECRI துணை இயக்குனர் திரு. M.ஜெயச்சந்திரன் அவர்களுக்கும்,தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு. சந்திர மோகன் அவர்களுக்கும்,சிவகங்கை மாவட்ட பாண்டியன் கிராம வங்கி மண்டல மேலாளர் திரு.சபாரத்தினம் அவர்களும்,லயன்ஸ் தேவகோட்டை திரு.ஐயப்பன் அவர்களும் , அபிராமி அந்தாதி போன்ற ஆன்மீக பாடல்களை தொடர்ந்து பாடி வரும் பேராசிரியர்  திரு.சுப்பையா மற்றும் அவர்களது துணைவியார் திருமதி உமா ஆச்சி அவர்களுக்கும் ,இப்பள்ளியின் முன்னாள்  மற்றும் தற்போதைய மாணவ,மாணவியர்க்கும் ,ஆசிரிய ,ஆசிரியைகளுக்கும் , விடுமுறை நாளாக இருந்தாலும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து அனைவரையும் பேட்டி  மற்றும் ஷூட்டிங் எடுத்த  புதிய தலைமுறை படப்பிடிப்பு குழுவினர்க்கும்,அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது நன்றியை மனமார தெரிவித்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment