Tuesday, 28 January 2025

 புத்தகம் வாசித்த மாணவர்களுக்கு பரிசு 

மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு 







தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசித்து சிறப்பாக பின்னுட்டம் வழங்கிய    மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் புத்தகங்களை பரிசாக  வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

                           பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில் குமரன்  நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பள்ளி  நூலக புத்தங்களை வாசித்து  சிறப்பான முறையில் வெளிப்படுத்திய மாணவிகளுக்கு  புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.ஆசிரியைகள்  முத்துலெட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் . 


 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தேவகோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில்குமரன்  பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக  வழங்கி  பாராட்டு தெரிவித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

No comments:

Post a Comment