Monday, 20 January 2025

 பயிலும் பள்ளியிலேயே ஆதார் எண் புதுப்பித்தல் முகாம்


பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா ஆதார் புதுப்பித்தல் 



  





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கட்டணமில்லா ஆதார் எண்  புதுப்பித்தல் முகாம் நடைபெற்றது.


                                      தமிழக அரசின்  பயிலும் பள்ளியிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா இலவச ஆதார் எண் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றது. ஐந்து வயது நிரம்பிய மாணவர்களுக்கும், 14 வயது நிரம்பிய மாணவர்களுக்கும் இதன் மூலமாக ஆதார் எண் புதுப்பித்தல் நடைபெற்றது. 

                                      இம்முகாமிற்கு   பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் . ஆதார் ஆப்பரேட்டர் நம்பு கார்த்திகா தேவி பள்ளி மாணவர்களுக்கான பயிலும் பள்ளியிலேயே ஆதார் புதுப்பித்தலுக்கான பணிகளை செய்தார்.

                                 ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசமாக  பயிலும் பள்ளியிலேயே இது போன்று எளிதாக ஆதார் புதுப்பித்தல் செய்வதற்கு பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

படவிளக்கம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் பள்ளியிலேயே  ஆதார் எண் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆதார் ஆப்பரேட்டர் நம்பு கார்த்திகா தேவி மாணவர்களின் ஆதார் எண் புதுப்பித்தல்  பணிகளை செய்தார்.

No comments:

Post a Comment