ஆசிரியர் தின விழா
அரசியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் படம் வரைந்து அசத்திய மாணவர்
ஆசிரியைகளுக்கு ரோஜா பூ, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறிய மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆசிரியை
முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியர் தினம் தொடர்பாக
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் புத்தகங்களாக வழங்கப்பட்டது.நிறைவாக
ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். மாணவர்கள் அனைவரும் ,ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்து அட்டை வழங்கியும், ரோஜா பூ கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் சிறப்பு செய்தனர்.3ம் வகுப்பு மாணவர் சபரிவர்ஷன் அரிசியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் படம் வரைந்து அனைவரையும் அசத்தினார்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு பரிசுகளை
வழங்கினார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி ஆகியோர் உடன்
உள்ளனர்.ஆசிரியர் தினத்தை
முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment