இஸ்ரோவின் ஆதித்யா எல்- 1 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஏவியுள்ள சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்- 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் - 3 அனுப்பி சாதனை படைத்தது.அதனை தொடர்ந்து இஸ்ரோ ஆதித்யா எல்- 1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.சூரியனைக் கண்காணிக்க இந்தியா சார்பில் அனுப்பப்படும் முதல் விண்கலமான ஆதித்யா எல்- 1, சூரியனின் காந்தப் புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா-எல்1 மிஷன், சூரியனை எல்.1 சுற்றுப்பாதையில் இருந்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்த விண்கலத்தில் 7 பேலோடுகள் அனுப்பபடுகின்றன. என்கிற தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார் .
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ ஏவவுள்ள ஆதித்யா எல்- 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=C7bkPYrlj3k
No comments:
Post a Comment