Thursday, 20 July 2023

 

சந்திரியான் - 3  வெற்றிக்கு  பள்ளி மாணவர்கள் பாராட்டு

 



 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்      வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                                 இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 
எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது. இது   3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை 40 நாட்களில் சென்றடையும்.  சந்திரயான்-3 விண்கலம் 14  ஆய்வு கருவிகள், 3900 கிலோ எடையுடன் விண்ணில் பாய்கிறது. சந்திரயான்- 3 ஆகஸ்ட் 23-ல் நிலவில் கால் பதிக்கும். சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் விண்கலம் ஆகும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். என்கிற தகவலை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு  எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.



பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)
எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்      வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



வீடியோ :
 
 https://www.youtube.com/watch?v=OirB8hTadSk

 


No comments:

Post a Comment