சந்திரயான் - 3 வெற்றி பெற வாழ்த்துகள்
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 11 வயது சிறுமி கடிதம்
தேவகோட்டை - சந்திரயான் - 3
திட்டமிட்டபடி, நிலவில் தரை
இறங்க வாழ்த்துகள் கூறி 11 வயது சிறுமி ,
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கடிதம்
எழுதி உள்ளது, சமூக
வலைதளங்களில், பாராட்டுகளை
பெற்று வருகிறது.
அந்த
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மதிப்பிற்கும், மரியாதைக்குரிய இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோம்நாத் சார் அவர்களுக்கு, வணக்கம்.என் பெயர் ம.கனிஸ்கா . நான் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன்.கடந்த வாரம் செய்தித்தாளில் சந்திரியான் - 3 செயற்கைகோள் ஜூலை 14 தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக உள்ள செய்தியை படித்தேன்.சந்திரியான் - 3 விண்ணில் வெற்றிகரமாக செல்ல என்னுடைய வாழ்த்துகள்.இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது பள்ளியின் சார்பாக பாராட்டுகள்.இவ்வாறு, அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment