கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி
பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவி கவிஷா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியர்கள் முத்துமீனாள் ,முத்துலெட்சுமி,ஸ்ரீதர் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக மாணவர் யோகேஷ்வரன் நன்றி கூறினார். நிகழ்வில் பரத நாட்டியம், மழலைகளின் குழு நடனம், இயற்கையை வலியுறுத்தும் நடனம் ,நிலம்,நீர்,ஆகாயம் காப்பாற்றுதல் தொடர்பான நாடகம், நெகிழி பை விழிப்புணர்வு வில்லுப்பாட்டு , கண்ணை கவரும் மழலைகளின் முருகன் பாட்டுக்கான குழு நடனம், தேவகோட்டை நகர சிவன் கோவில் வரலாறு தொடர்பான பேச்சு என அருமையாக ஒரு மணி நேரம் நிமிடங்கள் மாணவர்கள் பார்ப்பவர்களை அசர வைத்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கந்தசஷ்டி விழாவில் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 12வது ஆண்டாக தேவகோட்டை கந்த சஷ்டி விழா கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறுவது குறிப்பிடத்தக்கது.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=erS4yIaevCY
https://www.youtube.com/watch?v=5QFIfKQNM4s
https://www.youtube.com/watch?v=ymvsFVkeJBk
https://www.youtube.com/watch?v=Y6G_snGsoA4
https://www.youtube.com/watch?v=AusT-Y9Z9_I
https://www.youtube.com/watch?v=dL7ibLV97PU
https://www.youtube.com/watch?v=nIfoE6-mLMM
https://www.youtube.com/watch?v=P8KRFauex5k
https://www.youtube.com/watch?v=SNKsX3U_Mjc
https://www.youtube.com/watch?v=nYjJ9Zkql7Q
https://www.youtube.com/watch?v=Se_4iSvhLJY
https://www.youtube.com/watch?v=DGvpH5P85bU
https://www.youtube.com/watch?v=ZHD3d6Lryqk
https://www.youtube.com/watch?v=ggBJk25-Fm8
No comments:
Post a Comment