குழந்தைகள் தின விழா
கல்வியும், தனி ஒழுக்கமும் வெற்றிக்கு வித்திடும்
நகராட்சி ஆணையாளர் பேச்சு
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
ஆசிரியை ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் தாமரை மாணவர்களிடம் பேசுகையில், கல்வியும், தனி ஒழுக்கமும் குழந்தை பருவம் முதலே நம்மிடம் வந்துவிட்டால் வெற்றி எளிதாகிவிடும்.குழந்தைகள் தினத்தன்று பாரத பிரதமர் நேருவின் தியாகங்களை எண்ணி பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவர் நேரு மாமா என்று பேசினார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஜாய் லின்சிகா, சபரிவர்ஷன், தவதுர்கா, ஹாசினி, கார்த்திக், சுபிக்ஷன், ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ,மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் தாமரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=sysuTq9a8iM
No comments:
Post a Comment