யோகா செய்து அசத்திய மாணவர்கள்
சர்வதேச யோகா தின விழா
உடலும் ,மனமும் புத்துணர்வு பெற யோகா செய்யுங்கள்
போலீஸ் டி.எஸ்.பி.பேச்சு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
ஆசிரியை செல்வமீனாள்
வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் முன்னிலை
வகித்தார் .தேவகோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமை தாங்கி பேசுகையில் , உடலும் ,மனமும் சேர்ந்து
புத்துணர்வுடன் இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும்.அதற்கு அனைவரும்
இளம் வயது முதலே யோகாவை கற்றுக்கொண்டு தினமும் யோகா செய்ய வேண்டும். யோகாவை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக
மாற்றி கொள்ளுங்கள்..இவ்வாறு
பேசினார். ஆசிரியர் ஸ்ரீதர் பயிற்சியில் மாணவர்களின் யோகா
நிகழ்வும் நடைபெற்றது.சிறப்பான முறையில் யோகா செய்து அசத்திய மாணவர்ளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி
கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
நடைபெற்ற உலக யோகா தினம் விழாவில் தேவகோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன்
சிறப்புரையாற்றினார். சிறப்பான முறையில் யோகா செய்து அசத்திய மாணவர்ளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=sUeK949jtLQ
https://www.youtube.com/watch?v=c9Ak7WnoPpk
No comments:
Post a Comment