Friday, 31 March 2023

 இலக்கிய மன்ற விழா 






காரைக்குடி  - சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை தொடக்கப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.

                                  பள்ளி ஆசிரியை லதா வரவேற்றார். பள்ளி செயலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் இளம்வயதில் திருக்குறள் படிப்பது மிகவும் நல்லது, அன்புடனும், பொறுப்புடனும், அனைவருக்கும் உதவும் வகையிலும் மாணவர்கள் தங்களது எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்  சிவகாமி பரிசுகளை வழங்கினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக ஆசிரியை சுமதி நன்றியுரை நன்றி கூறினார். ஆசிரியை கண்ணம்மை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். 


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை தொடக்கப்பள்ளியில் இலக்கிய மன்ற பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் பள்ளியின் செயலர்  விஜயலட்சுமி, நிர்வாகக்குழு உறுப்பினர்  சிவகாமி , தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள்.





No comments:

Post a Comment