தேவகோட்டை-
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
அறிவியல் ஆய்வக களப் பயணமாக ஆனந்தா கல்லூரிக்கு சென்று
ஆய்வகங்களை ஆர்வமாக பார்வையிட்டனர்.
ஆய்வக களபயணம் வந்தவர்களை கல்லூரி முதல்வர் ஜான் வசந்த குமார் வரவேற்றார்.இயற்பியல் துறை பேராசிரியர்கள் பவுன்ராஜ் ,அசோகன் ,வேதியியல் துறை பேரா . ராஜேஷ் கண்ணா, கணினி அறிவியல் துறை தலைவர் ஆகியோர் ஆய்வகங்கள் தொடர்பாக விளக்கினார்கள்.நூலகர் ஆரோக்கியசாமி நுலகத்தில் புத்தகங்கள் எடுப்பது தொடர்பாகவும்,புத்தகம் வாசித்தல் தொடர்பாகவும் விளக்கினார்..களப்பயணத்தில் விளையாட்டு மைதானம் ,வேதியியல் ,இயற்பியல்,கணினி அறிவியல் துறைகளின் ஆய்வகங்களை
பார்வையிட்டனர்.நூலகம் சென்று எவ்வாறு நூல்களை அடுக்குவது என்பது குறித்து
அறிந்துகொண்டனர். மாணவர்கள் ஆகாஷ்,யோகேஸ்வரன், திவ்யஸ்ரீ, ஜெயஸ்ரீ, கனிஸ்கா ஆகியோர் பல்வேறு சந்தேகங்களை
கேட்டு தெளிவு பெற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் நன்றி
கூறினார். கல்லுரியின் உடற்கல்வி ஆசிரியர் இசபெல்லாரூஸ் மேரி மாணவர்களை அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். கூடை பந்து சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசு வழங்கினார்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கருப்பையா செய்திருந்தார் . இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக கல்லூரி ஆய்வக
சோதனை கூடங்களுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப் பயணமாக ஆனந்தா
கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்று ஆய்வகங்களை பார்வையிட்டனர்.கல்லூரி முதல்வர் ஜான் வசந்த குமார் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , ஆசிரியர் கருப்பையா ஆகியோர் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=xoM7-eQmWbA
No comments:
Post a Comment