Monday, 26 April 2021

பாட பயிற்சி கட்டகம் மற்றும் பயிற்சி புத்தகங்கள் வழங்குதல் 





 

 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இணைப்பு பாடப் பயிற்சி கட்டகம் மற்றும் பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டது .

                                       கோவிட்  பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் நீண்டகாலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களின் பெற்றோர்களிடம் இணைப்புப் பயிற்சி கட்டகமும் ,  பயிற்சிப் புத்தக வழங்கப்பட்டது . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,கருப்பையா ஆகியோர் இணைப்பு பாடப் பயிற்சி கட்டகம் சார்பான ஒளிபரப்பு கால அட்டவணை அனைத்து மாணவர்களின் பெற்றோர்களிடமும் வழங்கினார்கள். பயிற்சிக்கான பதில்களை பயிற்சி புத்தகத்திலேயே மாணவர்கள் செய்யக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைப்பு பயிற்சி கட்டகம் மற்றும் பயிற்சி புத்தகம் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வலுவூட்டும். தாமாகவே பயிற்சி செய்து கற்பதற்கும் பெரிதும் உறுதுணை செய்யும்.

                                      காணொலி ஒளிபரப்பின் போது அனைத்து மாணவர்களும் இணைப்பு பாடப் பயிற்சி கட்டகத்துடன்  காணொலியைக் காண அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளின் முடிவில் இணைப்பு பாடப் பயிற்சி கட்டத்தில் உள்ள மதிப்பீட்டு பகுதியை மாணவர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விலையில்லா நோட்டு புத்தகத்தில் தவறாமல் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் இணைப்பு பாடப் பயிற்சி கட்டகம் மற்றும் பயிற்சி புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ,கருப்பையா ஆகியோர் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment