உலக புவி தினம்
மரங்கள் அதிகம் வளர்த்து பூமித்தாயை காத்திடுங்கள் - மாணவி கவிதை வாயிலாக வேண்டுகோள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக புவி தினத்தையொட்டி பூமியை பாதுகாக்க உங்கள் யோசனைகள் என்ற தலைப்பில் இணையம் வழியாக போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 22ல், புவியின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், உலகெங்கிலும், 192 நாடுகளில், உலக புவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று, நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இயற்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீங்குகள் அனைத்தும், பருவ நிலை மாற்றம், புதிய வைரஸ்களின் தாக்கம் என மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.எனவே, உலக புவி தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி,செல்வமீனாள் , முத்துமீனாள் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக இயற்கையை பாதுகாக்க வேண்டி ஓவியம் வரைந்தும் , கவிதை சொல்லியும்,பல கருத்துக்களை பேசியும் விடியோவாக அனுப்புமாறு கூறினார்கள்.பெரும்பாலான மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.புவியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் பங்களிப்பு அமைந்தது பாராட்டத்தக்கது என பெற்றோர்கள் தெரிவித்தனர்..பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி திறந்த உடன் பரிசுகள் வழங்கப்படும்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக புவி தினத்தையொட்டி பூமியை பாதுகாக்க உங்கள் யோசனைகள் என்ற தலைப்பில் இணையம் வழியாக நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். மரங்கள் அதிகம் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி,செல்வமீனாள் , முத்துமீனாள் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக இயற்கையை பாதுகாக்க வேண்டிஆலோசனை வழங்கினார்கள்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=98aPdRDPxXY
https://www.youtube.com/watch?v=0Q5sKG3_S3Q
https://www.youtube.com/watch?v=--OmNztKWU8
No comments:
Post a Comment