மாணவர்களை தாய்மொழியில் சிந்திக்க கற்று கொடுங்கள்
தேவகோட்டை- சிவகங்கை
மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்
ஆசிரியர்களுக்கு எளிமையாக தமிழை கற்றுக்
கொடுப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பயிற்சி வகுப்பிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ராமநாதபுரம் மாவட்டம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மங்களேஸ்வரி முன்னிலை வகித்தார்.மாநில தமிழ் பயிற்றுநர் முனைவர் மு.கனகலட்சுமி
ஆசிரியர்களுக்கு தமிழை எளிமையாக எவ்வாறு கற்று கொடுக்கலாம் என்பது தொடர்பாக பயிற்சி அளித்து பேசுகையில், மாணவர்களிடம் மொழிப்பற்றையும் மொழியின் மீது ஆசையையும் வளர்க்க
வேண்டும்.அப்படி ஆசிரியர்களாகிய நாம் செய்தால் மாணவர்கள் தானாக
சிந்திக்கவும்,தமிழ் மொழியில் வாசிக்கவும் எழுதவும் செய்வார்கள் .ஒரு குழந்தைக்கு ஆறு வயதில் தான், மூளை முழுமை பெறுகிறது. துவக்க
பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், இந்த வயது கொண்டவர்கள்.முதல் வகுப்பிலேயே ஒரு மாணவனை தமிழ் எழுத்துகளை வாசிக்க ,எழுத வைத்துவிட்டால், பள்ளி இடைநிற்றலை தவிர்க்க முடியும்.என்று பேசினார்.பயிற்சியில் ராமநாதபுரம் ,சிவகங்கை,புதுக்கோட்டை,திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எளிமையாக தமிழை கற்பது தொடர்பான பயிற்சியினை மாநில தமிழ் பயிற்றுநர் முனைவர் மு.கனகலட்சுமி நடத்தினார்.
மேலும் விரிவாக :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற எளிமையான முறையில் எவ்வாறு தமிழை கற்றுக்கொடுப்பது தொடர்பான பயிற்சியில் மாநில தமிழ் பயிற்றுநர் முனைவர் மு.கனகலட்சுமி மேலும் கூறியதாவது :
பயிற்சிக்கு
வந்திருந்த ஆசிரியர்கள் கூறியதாவது:ஒரு ஆசிரியராக இருந்து இன்னொரு
ஆசிரியர் கற்பிக்கும் முறை பற்றி வகுப்பு எடுப்பதை பார்க்க மகிழ்வாக
இருந்தது..இந்த பயிற்சிக்கு வந்த பிறகு தமிழை எவ்வாறு வாசிக்க எழுத கற்றுக்
கொடுக்க வேண்டும் என்ற விளக்கம் கிடைத்துள்ளது..இந்த பயிற்சியில் நாங்கள்
கற்றுக் கொண்டதோடு நின்றுவிடாமல் எங்களது மாணவர்களுக்கும் பயிற்சியில்
கற்றுக் கொண்டதை கற்றுக் கொடுப்போம்.இந்த பயிற்சியானது சரியான காலத்தில்
எங்களுக்கு கிடைத்ததாகவே உணர்கிறோம் என்றனர்..
முன்னதாக
பள்ளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதச் செய்து மாணவர்கள் செய்யும் தவறுகள் சுட்டிக்
காட்டப்பட்டது..பின்னர் மாணவர்களுக்கும் ல,ள,ழ ,ந,ன,ண எழுத்துக்கள்
உச்சரிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது..
இப்பயிற்சியில்
கலந்து கொண்ட மாணவர்கள் எழுத்துக்களை தனியாக வாசித்து பழகிய எங்களுக்கு
சேர்த்து பிழையின்றி வாசிப்பது ,உச்சரிப்பது எப்படி என்பதை இப்பயிற்சியின்
மூலம் தெளிவாக கற்றுக் கொண்டோம் என்றனர்..இப்பயிற்சியில் திருச்சியைச்
சேர்ந்த நல்லாசிரியை லதாபாலாஜி மற்றும் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த
ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
No comments:
Post a Comment