அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
தமிழ்நாடு
அரசு தனி பேருந்து மூலம் தேவகோட்டையில்
இருந்து காரைக்குடிக்கு சென்று போட்டியில் பங்கேற்று அதிக பரிசுகளை குவித்து
மாணவர்கள் சாதனை
தனியார் பள்ளி
மாணவர்களுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற தேவகோட்டை அரசு உதவி பெறும்
பள்ளி மாணவ,மாணவியர்
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு
உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பாராட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை
தாங்கினார். காரைக்குடி தமிழ்ச் சங்கம் சார்பாக காரைக்குடியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டிகளில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி,நீதி
நெறி விளக்கம் ஆகியவற்றை மனனம் செய்து கருத்துடன்
தெரிவித்து இப்பள்ளி மாணவ,மாணவியர் 2ம் வகுப்பு முதல் 8ம்வகுப்பு வரை 15 பேர் வெற்றி
பெற்று பரிசு பெற்றனர்.மாணவர்கள்
ஆகாஷ்,திவ்யஸ்ரீ,ஜெயஸ்ரீ,அனுசியா ,வெங்கட்ராமன், கீர்த்தியா , ராஜேஸ்வரி . சபரி,காயத்ரி,கார்த்திகேயன்,ராஜே ஷ்,சங்கீதா,வித்யா,ஜீவா,தனலெட் சுமி
ஆகியோர் பரிசு மற்றும்
சான்றிதள்கள் பெற்றனர். பரிசு பெற்றவர்களை ஆசிரியர் அனைவரும் பாராட்டினார்கள்.ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.பள்ளி விடுமுறை நாளன்று மாணவர்களை
ஆசிரியர்கள் காரைக்குடிக்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.பள்ளியின்
சார்பாக கலந்து கொண்ட 43 மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக் கும் மதிய உணவு வழங்கப்பட்டது.இப்போட்டிகளில்
பெருவாரியான பெற்றோர்களும் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு
தனி பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து
காரைக்குடிக்கு சென்று போட்டியில் பங்கேற்று அதிக பரிசுகளை குவித்து மாணவர்கள்
சாதனை படைத்தனர்.கடந்த ஆண்டு இதே போட்டிகளில் 11 மாணவர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மாணவர்கள் மறந்து
போன தமிழ் அறநூல்களை இளம் பிள்ளை பருவத்திலே பள்ளிகளில் படிக்க செய்து அதனை போட்டியாக வைத்து பரிசுகள்
மற்றும் சான்றிதல்கள் வழங்கி தொடர்ந்து
நடத்தி வரும் காரைக்குடி தமிழ் சங்க தலைவரும், அழகப்பா பல்கலை கழகத்தின்
நாட்டுநலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் ,தமிழ் துறை பேராசிரியருமான ராசாராம் மற்றும் அவரது குழுவினர்க்கும்
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பட விளக்கம் : அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர் சான்றிதழ் மற்றும் பரிசு
பொருள்களுடன் உள்ளனர்.
5
No comments:
Post a Comment