Sunday, 25 May 2014


பார்வையற்றோர் பள்ளி சாதனை


மதுரை, :மதுரை அருகே உள்ள பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
மதுரை அருகே சுந்தராஜன்பட்டியில் உள்ளது. இந்திய பார்வையற்றோர் கழக பள்ளி. இங்கு பார்வை குறைபாடுடைய 31 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியைத் பெற்று சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி பொதுச் செயலாளர் ரோசன் பாத்திமா உள்பட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment