Friday, 24 June 2022

 

பள்ளி தேடி வந்த புத்தக பரிசு 

 




 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியினை சிறந்த பள்ளியாக தேர்வு செய்து புத்தகங்கள் பரிசாக தபால் மூலம் வழங்கப்பட்டது.

                                 சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் சார்பில் பள்ளியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அளவில் 100 பள்ளிகளை தேர்வு செய்து சுமார் 1000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக பள்ளிகளின் முகவரிக்கே அனுப்பி உள்ளனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுத்து விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ணரின் புத்தகங்கள் பள்ளிக்கே தபால் மூலம் வந்தடைந்தது.புத்தகங்கள் அடங்கிய பெட்டியை பள்ளி  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பெற்று பள்ளி மாணவர்களிடம் வழங்கினார்.பள்ளி தேடி பரிசு அனுப்பிய சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்துக்கு பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள் கருப்பையா,செல்வமீனாள் ஆகியோர் நன்றி கூறினார்கள்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியினை சிறந்த பள்ளியாக தேர்வு செய்து  சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் சார்பில் புத்தகங்கள் பரிசாக பள்ளிக்கு தபால் மூலம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment