Monday, 28 March 2022

பயமில்லாமல் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் 

அரசு மருத்துவர் வேண்டுகோள் 

 






Sunday, 27 March 2022

 ஆச்சரியத்தில் அசத்திய சலூன்காரர்

 

ஒரு நாளைக்கு  எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறேன்? எவ்வளவு மணி நேரம் ஓய்வில் இருக்கின்றேன் ? கணக்கிட்டு தன்னை சரிப்படுத்தி கொள்ளும் பணியாளரின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்திய அனுபவம் 

 



Thursday, 24 March 2022

நியாயத்தின் மீது விருப்பம் கொள்ளுங்கள் 

நேர்மையின் மீது நம்பிக்கை வையுங்கள்

 அறக்கட்டளை நிர்வாகி பேச்சு 

 

  தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு ,அபிராமி அந்தாதி ,திருப்புகழ் போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு  பரிசளிப்பு விழா







Wednesday, 23 March 2022

சிபிஎஸ் ஒழிப்பு என்கிற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி STFI சார்பாக நடைபெற்ற மாவட்ட தலைநகர ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட தலைநகரம் சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தருணம் நட்புடன்                                                           லெ.சொக்கலிங்கம், TNPTF,தேவகோட்டை

Monday, 21 March 2022

உலக தண்ணீர் தினம்

கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் 

இளம் வயதிலேயே தண்ணீர் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் - வட்டாட்சியர் அறிவுரை 






Saturday, 19 March 2022

 பரிசளிப்பு விழா 

  தானத்தில் சிறந்த தானம் நிதானம் - மாணவர்களுக்கு அறிவுரை

அறக்கட்டளை நிர்வாகி  பேச்சு 





 

Thursday, 17 March 2022

சட்ட விழிப்புணர்வு முகாம் 

 
நீதிபதி மாணவர்களுடன் கலந்துரையாடல் 
 
 சட்டம் தொடர்பான மாணவரின் கேள்விகளுக்கு கதைகளின் மூலம்  பதில் சொல்லி எளிதாக புரிய வைத்த நீதிபதி 






Monday, 14 March 2022

  குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள் 

 இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் - மருத்துவர் அறிவுரை 

 





 


தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.

   

                           ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமை தாங்கினார் .சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரைகளை  தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாம் மாணவர்களுக்கு வழங்கி பேசுகையில், மாணவர்கள் இனிப்பு சாப்பிடுவதை குறைத்து கொள்ள  வேண்டும்.கீரை மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட்டால் குடற்புழு முற்றிலும் அழிந்துவிடும்.சாப்பிடுவதற்கு முன்பும்,விளையாடிவிட்டு விட்டு வந்தபின்பும் அவசியம் கை ,முகம்,கால் கழுவி கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது குடற்புழு முட்டைகள் வையிற்றுக்குள் செல்வதை அறவே தடுக்க முடியும்.நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள இயலும் என்று பேசினார். ஆரம்ப சுகாதார நிலைய  செவிலியர்  மேரி மாத்திரைகள் வழங்க ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

                   5 முதல் 13 வயது வரை உள்ள மாணவ,மாணவியர்க்கு  400 மி.கி., மாத்திரை வழங்கபட்டது.ரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள  அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகளை  தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாம் வழங்கினார் . செவிலியர் மேரி ஏற்பாடுகளை செய்து இருந்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 
வீடியோ :   
 
 https://www.youtube.com/watch?v=rGuGFDUJvlU
 
 https://www.youtube.com/watch?v=DRJIA8i8MCY
 
 
 
 
 
 

 

Saturday, 12 March 2022

 முதுமையில் சொத்துக்களை அனுபவிக்க முடியாத நிலை.- என்ன செய்யவேண்டும் ? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசிய தகவல்கள்

-----------------------

இதெல்லாம் செய்யவில்லை எனில் வங்கியில் இருந்து 10 ரூபாய் கூட திரும்ப பெறமுடியாது - என்ன செய்யலாம் ? விரிவான தகவல்கள் .

 

 

 



 

Friday, 11 March 2022

எளிய அறிவியல் சோதனைகள்  

 



Monday, 7 March 2022

உலக மகளிர் தினம் 

பெருமை மிகு பெண் வெற்றியாளர்கள்  நாடகம் நடித்து அசத்திய மாணவர்கள் 

 





 மகளிர் அனைவருக்கும் சர்வேதச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

நட்புடன் 

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம் .




Sunday, 6 March 2022

வார வழிபாட்டில் பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு 


Wednesday, 2 March 2022

தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி முகாம் 

 எண் ,எழுத்து , குறியீடு மூன்றும் மிக முக்கியம் 

கடின உழைப்பு,விடா முயற்சி,தொடர் பயிற்சி இருந்தால் வெற்றி உறுதி