Tuesday, 14 September 2021

 அன்பினால் எல்லா உயிர்க்கும் நன்மை - மாணவர்களுக்கு ஓவிய போட்டி

பூமியில் அமைதி நிலவட்டும் - இணையம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

 


 

 




























 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு    பூமியில் அமைதி நிலவட்டும்   என்பதை வலியுறுத்தி ஓவிய போட்டி இணையம் வழியாக நடைபெற்றது.

 
           கொரோனா காலமாக இருப்பதால் மாணவர்களுக்கு இணையம் வழியாக   பூமியில் அமைதி நிலவட்டும் என்கிற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வ மீனாள்  ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். அன்பு ஒன்றுதான் உலகில் அனைவருக்கும் சமாதானத்தையும், சகோதரத்தையும் ஏற்படுத்தக்கூடியது என்பதை விளக்கும் வகையில் ஓவியங்கள் வரைந்து  அதிகமான அளவில் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு விரைவில் சான்றிதழ்கள்  வழங்கப்பட உள்ளது.
 
 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  பூமியில் அமைதி நிலவட்டும் என்கிற தலைப்பில் அன்பை வலியுறுத்தும் வகையில்  இணையம் வழியாக ஓவியம்   போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துமீனாள், செல்வமீனாள் ,  முத்துலட்சுமி ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி அதிக அளவில் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்தனர்.

No comments:

Post a Comment