Wednesday, 16 June 2021

 தமிழக அரசின் விலையில்லா முட்டை வழங்குதல் 




 

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்

 

  ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும்   பத்து முட்டைகள் சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது  

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டைகள் வழங்கப்பட்டது.
                               கொரோனா தொற்று பரவலால்  பள்ளிகள் திறக்காத நிலையில்,  சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு  பத்து முட்டைகள்  சத்துணவு மையங்களில் வினியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியரின் பெற்றோர்களுக்கு விலையில்லா முட்டைகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள்,கருப்பையா , சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி, சமையலர் சரசு  ஆகியோர் செய்து இருந்தனர். மாணவர்களின்   பெற்றோர்கள்  அரசின் நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

ட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டைகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் வழங்கினார் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,கருப்பையா ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி,சமையலர் சரசு ஆகியோர் செய்து இருந்தனர். 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment