Saturday, 13 February 2021

 தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டம்

எழுத ,படிக்க தெரியாதவர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கும் மாற்றுத்திறனாளி தன்னார்வலர்

 




தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் எழுத,படிக்க தெரியாத முதியவர்களுக்கு  மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி  ஆர்வத்துடன் கற்றுக்கொடுத்து வருகிறார்.

                                            தமிழ்நாடு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் , 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, 'கற்போம் எழுதுவோம்' என்ற பெயரில் புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையமான நடராஜபுரம் பகுதியில் எழுத படிக்க தெரியாத பெரியவர்களுக்கு 
மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி  ஆர்வத்துடன் கற்றுக்கொடுத்து வருகிறார்.கற்றுக்கொள்பவர்கள் வேலைக்கு சென்று விட்டு வந்து கற்றுக்கொள்வதால் மாலை 6 மணிக்குமேல் பெரும்பாலான நாட்கள் பாடம் கற்றுக்கொடுக்கும் நிலை உள்ளதாக தன்னார்வலர் கூறினார்.மாற்று திறனாளி பெண் தன்னார்வலர் ஆர்வத்துடன் முதியவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியைகள் முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.           

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் எழுத,படிக்க தெரியாத முதியவர்களுக்கு  மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி  ஆர்வத்துடன் கற்றுக்கொடுத்து வருகிறார்.இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியைகள் முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.       


வீடியோ

https://www.youtube.com/watch?v=IRoAy1MYx10






No comments:

Post a Comment