Wednesday, 13 November 2019

  குழந்தைகள் தின விழா 

புத்தகங்கள் பரிசு வழங்கி அசத்திய  நூலகர் 



 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.



                                                  மாணவர் அஜய் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நூலகர் செந்தில்ராஜா குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்  நேரு மாமா பற்றி கவிதை கூறிய ஜனஸ்ரீ , அஜய் பிரகாஷ், நேரு குறித்து ஆங்கில உரை நிகழ்த்திய நதியா,குழந்தைகள் தினம் பற்றி ஆங்கில பாடல் பாடிய பிரஜித்,மனிதருள் மாணிக்கம் பற்றி பாடல் பாடிய அட்சயா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார். தேவகோட்டை நூலக உதவியாளர் சுரேஷ் காந்தி உட்பட ஏராளமான பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.மாணவி சிரேகா  நன்றி கூறினார்.அனைத்து மாணவர்களுக்கும் கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை நூலகர் செந்தில்ராஜா பரிசுகள் வழங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment