தேவகோட்டையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி: கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்
குடிநீர் குழாய் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள் - கோட்டாட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் டெங்கு
விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை கோட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமை தாங்கி பேரணியை தொடக்கி வைத்தார். பேரணியானது, பள்ளியில் தொடங்கி பிரதான வீதிகள் வழியாகச்
சென்றும் மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள்
டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்தும், டெங்கு உருவாகும் விதம் குறித்தும்
முழக்கமிட்டவாறு சென்றனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருப்பையா,ஸ்ரீதர், செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.பேரணியில் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். பேரணி முடிவில் கோட்டாட்சியர் மாணவர்களிடம் பேசுகையில் , வீடுகளின்
அருகே உள்ள தண்ணீர் குழாய்களின் அருகே தண்ணீர் தேங்காமல்
பார்த்துக்கொள்ளுங்கள்.பாசி படராமலும் கவனமாக இருங்கள்.தேங்காய் சிரட்டை
,ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு டப்பாக்களை கவனமாக அழித்து விடுங்கள்.டெங்கு
தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகம் ஏற்படுத்துங்கள் என்று
பேசினார்.மாணவர்கள் மகாலெட்சுமி,ஜனஸ்ரீ ஆகியோர் டெங்கு காய்ச்சல் பற்றியும், அதனைத் தடுக்கும்
முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.மாணவி நதியா கை கழுவும் முறைகளை விளக்கினார்.கீர்த்தியா,மெர்சி , நதியா ஆகியோர் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு பாடல்கள் பாடினார்கள்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற டெங்கு
விழிப்புணர்வு பேரணியை தேவகோட்டை கோட்டாட்சியர் சங்கரநாராயணன் தொடங்கி வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
No comments:
Post a Comment