மாணவர்களுக்கு பாராட்டு
4286 பாடல்கள் பாடி பரிசு பெற்று அசத்திய மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேக்கிழார் விழாவில் 4286 பாடல்கள் பாடி பரிசு பெற்றதற்க்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.தொடர்ந்து நான்கு வருடமாக இம்மாணவர்கள் பாடல்களை பாடி பரிசு பெற்று வருகின்றனர்.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். மாணவர்கள் ஐயப்பன்,வெங்கட்ராமன், ஈஸ்வரன்,சக்திவேல் ,சபரி,நதியா,சங்கரி,ஜனஸ்ரீ ,கீர்த்தியா ,மகாலெட்சுமி ஆகியோர் தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் தொடர்ந்து மூன்று நாட்கள் 4286 பெரிய புராண பாடல்களை பாடி சான்றிதழ் மற்றும்
பரிசாக பணமும் பெற்றதற்கும்,சிறப்பாக பயிற்சி அளித்த ஆசிரியை செல்வமீனாளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
4286 பாடல்கள் பாடி பரிசு பெற்று அசத்திய மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேக்கிழார் விழாவில் 4286 பாடல்கள் பாடி பரிசு பெற்றதற்க்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.தொடர்ந்து நான்கு வருடமாக இம்மாணவர்கள் பாடல்களை பாடி பரிசு பெற்று வருகின்றனர்.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். மாணவர்கள் ஐயப்பன்,வெங்கட்ராமன், ஈஸ்வரன்,
பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேக்கிழார் விழாவில் 4286 பெரிய புராண பாடல்கள் பாடி பரிசு பெற்றதற்க்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
No comments:
Post a Comment