Sunday 26 May 2019

இஸ்ரோ விஞ்ஞானி - நீதியரசர்கள்-பல்கலைக்கழக துணைவேந்தர்கள்  
 ஆளுமைகளுடன் கலந்துரையாடல்

கேள்வி கேட்கும் திறனை வளர்க்கும் பள்ளி  






 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் 80க்கும் மேற்பட்ட ஆளுமைகளுடன்  கலந்துரையாடல் செய்து ஆளுமை திறனை வளர்த்துக்கொண்டு உள்ளனர்.
             தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்ளை தன்னம்பிக்கை உடையவர்களாகவும் ,கேள்விகள் அதிகம் கேட்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கும் வகையில் பல்வேறு களப்பயணங்களையும் ,ஆளுமை திறன் உடையவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து மாணவர்களும் பிற்காலத்தில் கல்வியில்  உயரிய லட்சியங்களை அடையும் வகையில் உருவாக்கி வருகிறார்கள் . கலந்துரையாடல் மூலம் சுயமாக சிந்திக்கும் திறனை கல்வியில் உயர்த்தியும்,எந்த விதமான கட்டணமும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளி மாணவர்ளுடன் கலந்துரையாடிய ஆளுமைகள் குறித்து தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :
                     
                                      இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில்    கேள்விகள் கேட்டாலே  ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்க்கின்றனர்.இது போன்ற நிலையில் அரசு உதவி  பெறும் நடுநிலைப் பள்ளியில் பல்வேறு ஆளுமைகளை பள்ளிக்கு நேரடியாக  அழைத்து வந்து மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்க தூண்டி அதன் தொடர்ச்சியாக பல கேள்விகளை மாணவர்களே கேட்கும் அளவிற்கு  அவர்களுக்கு சிந்தனையை தூண்டி அவர்களது கேள்வி ஞானம் இன்று வளர்ந்துள்ளது.
                                 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு   முதன்முதலாக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு  பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்க சொல்லி கலந்துரையாடல் செய்தார்.அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மட்டுமே சுமார் 75 ஆளுமைகள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்று உள்ளனர். மாணவர்கள் ஆளுமைகள்  சொல்வதை உள்வாங்கி அவர்கள் முன்பாகவே அதனை தொகுத்து சொல்வதை கண்டு வியப்பில் செல்கின்றனர்.இதற்கு நாங்கள் பள்ளியில் செயல்படுத்தும் பல்வேறு போட்டிகள்,புத்தகங்கள் படித்து அதனை மறு நாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் சொல்ல சொல்வதும்,ஆளுமைகள் பேசியவற்றை மறுநாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் சொல்ல சொல்வதும் (ஒவ்வொரு மாணவரும் ஒன்று அல்லது இரண்டு என) ஆளுமைகள் சொன்ன கருத்துகளை சொல்லி அனைவரும்  அனைத்து கருத்துகளையும் சொல்வது போன்று பயிற்சி அளித்து வருகிறோம்.இதனால்தான் காவல் நிலையத்திற்கு களப்பயணம் சென்றபோது டிஸ்பி  கருப்பசாமியிடம் எட்டாம் வகுப்பு படிக்கும்  விஜய்  என்கிற மாணவர் சினிமா படத்தில் எப்படி ஒரு போலீஸ் பல பேரை அடித்து தள்ளுகிறார் என நேரடியாக கேள்விகள் கேட்டார்.  இது போன்று பல்வேறு கேள்விகளை கேட்க செய்ய வகுப்பறையிலும்,பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்திலும் கேட்க சொல்கிறோம்.இது பல்வேறு புதிய சிந்தனைகளை மாணவர்களிடத்தில் விதைப்பதற்கு உதவியாக உள்ளது.ஏன் ,எதற்கு,எப்படி என்று கேள்விகள் கேட்பதற்கு நாம் இளம் பள்ளி பருவத்தில் உருவாக்கி விட்டால் அதுவே அவர்களுக்கு  வரும்காலத்தில் மிகுந்த உதவியாக இருக்கும்.கேள்விகள் அதிகம் கேட்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வருகிறோம்.பல்வேறு ஆளுமைகளை பள்ளிக்கு அழைத்து வரும்போது அவர்களை போல் தாங்களும் வரவேண்டும் என்கிற எண்ணம் மாணவர்களிடத்தில் வளர்ந்து வருகிறது.இது போன்று பதவிகள் உள்ளன என்கிற எண்ணமும் ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கு
ம் தெரிய வருகிறது.இந்த ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ,நீதியரசர்கள்,பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ,துபாய் பொறியாளர் உட்பட 80க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டிலும் , கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட ஆளுமைகள் மாணவர்களுடன் பள்ளிக்கே வந்து கலந்துரையாடி சென்று உள்ளனர்.இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.
                          
 படம் விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் இஸ்ரோ விஞ்ஞானி,நீதியரசர்கள்,பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ,துபாய் பொறியாளர் உட்பட 80க்கும் மேற்பட்ட ஆளுமைகளுடன் மாணவர்கள் கலந்துரையாடி ஆளுமை திறனை வளர்த்து கொண்டுள்ளனர்.






மேலும் விரிவாக :

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 2018-2019ம் கல்வியாண்டில் 80க்கும் மேற்பட்ட ஆளுமைகள் யாரெல்லாம் மாணவர்களுடன் 
கலந்துரையாடினார்கள் என்பதை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :
                 இந்த கல்வி ஆண்டில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,நீதியரசர்கள் கிருபாகரன் மதுரம்,விஜயகுமார்,மோகனா ராமசாமி ,அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜேந்திரன்,சுப்பையா ,துபாய் பொறியாளர் ரவி சொக்கலிங்கம்,அரசு மருத்துவர்கள் எழில்,தமீம் அன்சாரி,பிரியா,மல்லிகை, செல்வகுமார்,லெனின்பிரபு ,கண் மருத்துவர் மகேஸ்வரி ,சமூக ஆர்வலர் பர்வத வர்தினி ,காவல் ஆய்வாளர் கீதா,சார்பு ஆய்வாளர்கள் மருதுபாண்டி,வெற்றி வேல்,தலைமை காவலர் கலா,செந்தாமரை கண்ணன்,வாழ்வியல் திறன் பயிற்சியாளர்கள் மதுரை தயானந்து,நான்சி,சிவகங்கை குமார்,காரைக்குடி ஜோஸ் அந்தோணி,மார்த்தாண்டம் சாம்,மதுரை விஜயகுப்தா,வித்யா கோடீஸ்வரன்,சிவகாசி தணிகைவேல் பாண்டியன்,சிவகாசி ராஜு அந்தோணி,மதுரை ஆடிட்டர் மோகன ஹரிஷ் பாபு,தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சேவியர்,துறை தலைவர்கள் விஜயன்,நாவுக்கரசு,வீரலட்சுமி,சரவணன்,பேராசிரியர்கள் செந்தில்,உமா,புவனேஸ்வரி,திருநாவுக்கரசு,நூலகர் திசாந்த்குமார், ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த்,துணை முதல்வர் விக்டர்,சேது பாஸ்கரா கல்லூரி தாளாளர் சேது குமணன் ,பேராசிரியர்கள் கருப்புராஜா,விக்னேஸ்வரன்,இந்திய அணியின் கால்பந்தாட்ட கழக வீரர் ராமன் விஜயன்,சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் குயின் எலிசபத்,தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன்,அ .மு.மு.அறக்கட்டளை செயலர்கள் ராஜகோபால்,நாராயணன் ,தமிழ்நாடு தீயணைப்பு துறை தேவகோட்டை நிலைய காப்பாளர் நாகராஜ்,காவலர் செந்தில்,தேவகோட்டை சப் கலெக்டர் ஆஷா அஜித்,தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி,தேவகோட்டை வட்டாட்சியர் மேசியா தாஸ்,துபாயில் படிக்கும் மாணவர் சிவபாலன்,கல்கி வார இதழின் உதவி ஆசிரியர் பொன் .மூர்த்தி,தமிழ் பயிற்றுனர் கனகலெட்சுமி ,அஞ்சலக அதிகாரி மலைமேகம் ,முத்தமிழ் வேத திருச்சபை ஆதிரெத்தினம், காரைக்குடி உமையாள் ராமநாதன்   கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜெயஸ்ரீ,தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி , பெங்களுரு  அகஸ்தியா  அறக்கட்டளை பொது மேலாளர் பல்ராம் , எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தேவகோட்டை அரசு தோட்டக்கலை அலுவலர் தர்மர், சென்னை சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளி சிறப்பு மாணவர்களின் பயிற்சியாளர் லெட்சுமி பிரபா,தாழையூர் ஸ்டேட் பேங்க் இந்தியா மேலாளர் திருவள்ளவன் ,அலுவலர் பிரபு ,தேவகோட்டை எல்.ஐ.சி.மேலாளர் சிவகாளிமுத்து ,வளர்ச்சி அதிகாரி முத்துக்குமரன்,திரைப்பட நடிகர் சண்முகராஜா,தேவகோட்டை எல்.ஐ.சி.காப்பீட்டு கழக ஊழியர் செயலர் செல்வராஜ்,தலைவர் செந்தில், அறந்தாங்கி திசைகள் குழு தலைவரும் ,அரசு மருத்துவருமான தெட்சிணா மூர்த்தி, திருச்சி எழுத்தாளர் டெய்சி ராணி,அறந்தாங்கி கல்வி மாவட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நல்லமுகமது ,ஆசிரியை யாஸ்மின் ராணி,  சென்னை காந்தி அமைதி நிலைய செயலர் குழந்தைசாமி , அவரது மனைவி கில்டா,இணை செயலர் முனைவர் செண்பகவல்லி,உறுப்பினர் சந்தர்,.சிவகங்கை நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன் , ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அனந்தராமன், கிராம நிர்மாண சங்க நிர்வாகி உருமத்தான்,உட்பட 80க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டிலும் , கடந்த ஐந்து ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட ஐ.எ .எஸ்., ஐ.ஆர்.எஸ்.,வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட ஆளுமைகள் மாணவர்களுடன் பள்ளிக்கே வந்து கலந்துரையாடி சென்று உள்ளனர்.இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.
                                    எங்கள் பள்ளிக்கு வந்த அனைத்து ஆளுமைகளும் சேவை மனப்பான்மையுடன் பள்ளிக்கு வந்து கலந்துரையாடி சென்றனர் என்பது பாராட்டுக்குரியது.அவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.இவ்வாறு தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
            






No comments:

Post a Comment