இன்றைய நிகழ்ச்சி (09/02/2019)
நடுநிலைப் பள்ளி மாணவர்களை கல்லூரிக்கு களப்பயணம் அழைத்து செல்லுதல்
களப்பயணங்களின் வழியாக கேள்விகள் கேட்டு நேரடி அனுபவத்தின் வாயிலாக கல்வியின் நிலையை மேம்படுத்துதல்
தொடர்ந்து 6வது வருடமாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் இயற்பியல்,வேதியியல்,விலங்கியல்,தாவரவியல் முதலான ஆய்வகங்களையும்,நூலகத்திற்கு சென்று எவ்வாறு நூலகத்தில் புத்தகங்கள் வரிசைப்படுத்தபடுகின்றன என்பது தொடர்பாகவும் நேரடி பயிற்சி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமை : திரு.சேவியர் அவர்கள்,முதல்வர்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தேவகோட்டை.
முன்னிலை : துறை தலைவர்கள் ( இயற்பியல் - திரு.விஜயன்,வேதியியல் - திரு.சரவணன்,விலங்கியல் - திரு.நாவுக்கரசு,தாவரவியல் - திருமதி.வீரலெட்சுமி , நூலகர் - திரு.திசாந்த் குமார் )
மாணவர்களை தொடர்ந்து ஆறாவது வருடமாக அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.)
களப்பயணம் ஏன் அழைத்து செல்ல வேண்டும் ? இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுவதாவது : எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்லூரியின் இயற்பியல்,வேதியியல்,தாவரவியல் ,விலங்கியல் ஆய்வகங்களுக்கு நேரடியாக அழைத்து செல்ல பட்டு அங்கு பேராசிரியர்களிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெறும்போது அவர்களது கல்வி அறிவு மேம்படுகிறது.பள்ளியில் புத்தகத்தை மட்டுமே படிக்கும் மாணவர்களுக்கு இது புதிய அனுபவத்தை கொடுக்கும்.மேலும் பொருளாதாரத்தில் ,சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இது போன்று கல்லூரிகளுக்கு அழைத்து வரும்போது அவர்கள் பிற்காலத்தில் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு குறிக்கோளாக உண்டு பண்ண வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.

No comments:
Post a Comment