Saturday, 30 June 2018
Sunday, 24 June 2018
Posted Date : 16:11 (21/06/2018)
Last updated : 16:11 (21/06/2018)
`பாய்ஸ் வீட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாதா என்ன?' பள்ளி மாணவியின் சுளீர் கேள்வி!
ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பேசிய வீடியோ பலராலும் ஷேர்
செய்யப்பட்டு வருகிறது. அது, மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பேச்சு அல்ல.
சமூகத்தில் பல ஆண்டுகளாகப் பல குடும்பங்களில் இயல்பாக நடந்துவரும்
விஷயத்தின் வேறொரு கோணத்தை அலசுகிறார், அந்த மாணவி.
தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் எனும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளி
மாணவி, சிரேகா. அவர் பேசியது என்னவென்று பார்க்கும் முன்பு, அப்படிப்
பேசுவதற்குத் தூண்டிய நிகழ்வு பற்றி பகிர்கிறார், பள்ளியின்
தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம்.
``எங்கள்
பள்ளியில் பாடங்களை நடத்துவதில் காட்டும் அக்கறைக்கு இணையாக, இந்தச்
சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவும் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் கடமையாக
வைத்திருக்கிறோம். அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு உதவும் வகையில் பல
இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறோம். அஞ்சல் நிலையம், வங்கி, தீயணைப்பு
நிலையம், வானவியல் நிலையம், வானொலி நிலையம் என எங்கள் மாணவர்கள்
பொதுவெளியில் பழகும் வாய்ப்பைத் தொடர்ந்து ஏற்படுத்தித் தருகிறோம். சக
ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் இது சாத்தியமாகிறது. அதுபோன்ற நிகழ்ச்சிகளில்
ஒன்றாக, `பாலினச் சமத்துவப் பயிற்சி முகாம்' நடத்தினோம்.

Friday, 22 June 2018
Tuesday, 5 June 2018
Sunday, 3 June 2018
முதல் நாள் சுற்று பயணம் :
அறிவியலின் அதிசயத்தை விளக்கும் விஸ்வேஸ்வரய்யா மியூசியம்
சூரிய உதயம் காண நந்தி மலை
பல ஆண்டுகளுக்கு பின்பு எப்படி இருப்போம் என்பதை யோசிக்க வைக்கும் இஸ்ரோ
ராமானுஜரின் திருமேனி மிளிரும் மேல்கோட்டை
பேப்பரை உள்ளே விட்டு வெளியே எடுக்கும் வகையில் அமைந்துள்ள தூண் காண பேலூர் செல்லுங்கள்
இசையுடன் தண்ணீர் நடனம் ஆடி அசத்தும் பெங்களூரு இந்திரா காந்தி இசையுடன் நீர் ஊற்று பகுதி
பெங்களூருவில் ஐந்து நாட்கள் சுற்று பயணம்

Subscribe to:
Posts (Atom)